தேசிய செய்திகள்

  • தடை அறிவிப்பை வாபஸ் பெற்ற டெல்லி அரசு.. இனி பழைய வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்கப்படும்..

    பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என்ற அறிவிப்பை டெல்லி அரசு வாபஸ் பெற்றுள்ளது.

    பெட்ரோல் பம்புகளில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்று டெல்லி அரசு சமீபத்தில் அறிவித்தது. 10 ஆண்டுகள் பழமையான டீசல் மற்றும் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது.. இது பரவலான விமர்சனங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியது. ஜூலை 1-ம் தேதி முதல் இந்த புதிய விதி அமலுக்கு வந்தது.

    இதற்காக தலைநகர் முழுவதும் உள்ள பெட்ரோல் பம்புகளில் வயது வரம்புகளை மீறும் வாகனங்களைக் கண்டறிந்து எரிபொருள் வழங்குவதை மறுக்க தானியங்கி எண் தகடு அங்கீகாரம் (ANPR) கேமராக்கள் பொருத்தப்பட்டன. டெல்லியில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) மற்றும் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை அமல்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இருப்பினும், இந்த விதி அமல்படுத்தப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, ரேகா குப்தா தலைமையிலான டெல்லி அரசு, இந்த முடிவை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெற்றுள்ளது. தெளிவின்மை, திடீர் செயல்படுத்தல் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட வாகன உரிமையாளர்கள் மீது அதன் விகிதாசாரமற்ற தாக்கம் குறித்து வாகன உரிமையாளர்கள் விமர்சித்தனர்.. மேலும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் நிபுணர்களின் இதுகுறித்து எதிர்வினையாற்றிய நிலையில் இந்த மாற்றம் வந்துள்ளது.

    இப்போது என்ன மாற்றங்கள்?

    பழைய வாகனங்களுக்கு எரிபொருள் கிடைக்கும்: 10 ஆண்டுகளுக்கும் மேலான (டீசல்) மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான (பெட்ரோல்) வாகனங்கள் டெல்லியில் உள்ள பெட்ரோல் பம்புகளில் மீண்டும் எரிபொருள் நிரப்பலாம்.

    பம்புகளில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதில்லை: பெட்ரோல் நிலையங்கள் இனி பழைய வாகனங்களை அவற்றின் வயதை அடிப்படையாகக் கொண்டு பறிமுதல் செய்யவோ அல்லது சேவையை மறுக்கவோ மாட்டாது.

    ANPR கேமராக்கள் அப்படியே இருக்கும்: பெட்ரோல் பம்புகளில் நிறுவப்பட்ட கேமராக்கள் பதிவு பராமரிப்புக்காக இருக்கலாம் என்றாலும், முன்னர் அறிவிக்கப்பட்ட எரிபொருள் தடையை அமல்படுத்த அவை பயன்படுத்தப்படாது.

    அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் பேசிய போது, “குடிமக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பல பங்குதாரர்களால் எழுப்பப்பட்ட கவலைகளை மதிப்பாய்வு செய்த பிறகு, ஜூலை 1 உத்தரவை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். மாசுபாட்டைக் குறைப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், ஆனால் மிகவும் சீரான மற்றும் உள்ளடக்கிய நடவடிக்கைகளைத் தொடர்வோம்.” என்று தெரிவித்தார்.

    சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வாகன மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கத்தை ஆதரிக்கும் அதே வேளையில், மின்சார வாகனங்களை ஊக்குவித்தல், பொது போக்குவரத்தை மேம்படுத்துதல் மற்றும் வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகளை விட கடுமையான உமிழ்வு சோதனை போன்ற நீண்டகால தீர்வுகளில் கவனம் செலுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

    இந்த உத்தரவை திரும்ப பெற்றதன் டெல்லியில் உள்ள ஆயிரக்கணக்கான வாகன உரிமையாளர்கள் இப்போது நிம்மதி அடைந்துள்ளனர்.

    Read More : பாஜக தேசிய தலைமைக்கு முதல் பெண் தலைவர்.. ரேஸில் 2 தமிழ்நாட்டு பெண்கள்.. யார் யார் ?

சினிமா 360°

  • சரத்குமாரின் 3BHK மட்டும் இல்ல.. இன்னும் ரெண்டு படம் இருக்கு.. நீங்க எந்த படத்துக்கு போறீங்க..?

    வாரா வாரம் வெள்ளிக்கிழமைகளில் புதுப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும். கடந்த வாரம் வெளியான படங்கள் சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில், இன்று வெளியாகும் படங்களுக்கு மக்களிடையே வரவேற்பு இருக்குமா என்ற கவலையில் தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் உள்ளனர். அந்த வகையில் இன்றைய தினம் 3 முக்கிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

    3BHK: தமிழ் சினிமா அதிரடி சண்டை காட்சிகள் கொண்ட படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற காலம் மறைந்து போய், தற்போது பீல் குட் படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இன்று 3 BHK படம் வெளியாக உள்ளது. ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    கணவன் மனைவியான சரத்குமார் மற்றும் தேவயானிக்கு சித்தார்த், மீதா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சென்னையில் வசித்து வரும் இந்த குடும்பத்தின் ஒரே கனவு சொந்த வீடு வாங்குவது தான். இதற்காக சிறுக சிறுக பணத்தை சேர்த்து வைக்கின்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு செலவு வருகிறது. இவை அனைத்தையும் கடந்து இறுதியில் அவர்கள் சொந்த வீடு வாங்கினார்களா? இல்லையா? என்பது தான் 3 BHK படத்தின் கதை. 

    பறந்து போ: ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பறந்து போ’. குழந்தை வளர்ப்பை விட குழந்தைகளை வளர்க்க பெற்றோர்கள் எப்படி வளர வேண்டும், வாழ வேண்டும் என்கிற கருத்தை கையமாக கொண்டு ஒரு நல்ல ஃபீல் குட் படமாக இந்த படம் அமைந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.

    படத்தின் கதை என்னவென்றால், கோகுல் (மிர்ச்சி சிவா) மற்றும் அவரது மனைவி கிரேஸ் ஆண்டனி இருவரும் வேலைக்கு செல்வதால், அவர்களுடைய மகன் அன்புவை (மிதுல் ரியான்) வெளியே அனுப்பாமல், எப்போதுமே வீட்டிலேயே அடைத்து வைக்கின்றனர். ஆன்லைன் கிளாஸ் என மற்றவர்களுடன் பழகும் வாய்ப்பு இல்லாமல் வளரும் சிறுவனை மையமாக கொண்டு இந்த படம் அமைந்துள்ளது. குழந்தை வளர்ப்பு எந்தளவுக்கு முக்கியம். அதற்கு முதலில் நாம் பெற்றோர்களாக வளர்ந்து விட்டோமா? என்பதை புரிய வைக்கக் கூடிய பாடமாகவே இந்த பறந்து போ படம் அமைந்திருக்கிறது.

    பீனிக்ஸ்: விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் ஃபீனிக்ஸ் . ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசு இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் பீனிக்ஸ் படத்தில் வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், மூனர் ரமேஷ், அபினக்ஷத்ரா, வர்ஷா, நவீன், ரிஷி, நந்தா சரவணன், முருகதாஸ், விக்னேஷ், ஸ்ரீஜித் ரவி ஆகியோர் இந்த நடித்துள்ளார்கள். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

    கதையின் நாயகன் சூர்யா விஜய் சேதுபதி ஒரு எம்எல்ஏ கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு  சிறார்களின் சிறைக்கு அனுப்பப்படுகிறார். அங்கு அவர் மீது பல முறை கொலை முயற்சிகள் நடக்கின்றன. அதில் இருந்து அவர் எப்படி தப்பித்தார்? கொலைக்கான காரணம் என்ன என்பதை பற்றி சுவாரஸ்யமாக சொல்லி இருக்கும் படம் தான் பீனிக்ஸ்.

    Read more: Tn Govt: 58 வயது கடந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ.6,000 ஓய்வூதியம்…! எப்படி பெறுவது…?

உலகம்

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என்ற அறிவிப்பை டெல்லி அரசு வாபஸ் பெற்றுள்ளது. பெட்ரோல் பம்புகளில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்று டெல்லி அரசு சமீபத்தில் அறிவித்தது. 10 ஆண்டுகள் பழமையான டீசல் மற்றும் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது.. இது பரவலான விமர்சனங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியது. ஜூலை 1-ம் தேதி முதல் இந்த புதிய விதி அமலுக்கு […]

பலர் காலையில் உடற்பயிற்சி செய்வதன் மூலமும், உணவில் மாற்றங்களைச் செய்வதன் மூலமும், வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலமும் எடையைக் குறைக்க முயற்சிக்கிறார்கள். இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், அவர்கள் எவ்வளவு கடினமாக முயற்சித்தாலும், உடல் எடையைக் குறைக்க ஒத்துழைக்காது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் பலர் உணராத ஒரு முக்கியமான காரணி உள்ளது. அதாவது, இரவில் இயற்கையாகவே உடலை ஆதரிக்கும் சில பானங்கள். நாம் தூங்கும்போது கூட நம் உடல் […]

இன்று நடைபெறும் தவெக செயற்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்த முக்கிய முடிவை விஜய் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தவெகவின் மாநில செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது.. விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தேர்தல் பணி, கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் அஜித்குமார் கொலை, விவசாயிகள் பிரச்சனை குறித்து கண்டன தீர்மானங்களை நிறைவேற்றவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. தேர்தலையொட்டி […]

கோவிட்-19 தடுப்பூசியான கோவிஷீல்ட் பாதுகாப்பானது என்றும், அறிவியல் பூர்வமாக சரிபார்க்கப்பட்டுள்ளது என்றும் Serum Institute of India தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் ஹாசன் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 20க்கும் மேற்பட்டோர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சித்தராமையா, ‘கொரோனா தடுப்பூசியின் தாக்கத்தால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம்’ என்ற சந்தேகத்தை எழுப்பி இருந்தார். இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் தேசிய […]

இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு தொடர்பான போராட்டத்தை தள்ளி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தவெகவுக்கு அறிவுறுத்தி உள்ளது. திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த போராட்டத்திற்கு இரண்டு […]

அஜித் கொலை வழக்கில் புகார் தாரர் நிகிதா இன்று நீதிபதி முன்பு ஆஜராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.. அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக மாவட்ட நீதிபதி 3-வது […]

அஜித்குமார் மரணம் குறித்து தகவல் அறிந்தவர்கள் சாட்சியம் அளிக்கலாம் என அஜித் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.. மேலும் மாவட்ட நீதிபதியும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். […]