திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் தீபத் திருவிழா முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய வந்த அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ரமேஷ் ஆகியோருடன் செய்தியாளர்கள் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வரும் நவம்பர் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. அதன் பாதுகாப்பு ஏற்பாடுகளை அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ரமேஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். […]
திமுகவில் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுவது நகைப்புக்குரியது என அதிமுக சட்டமன்ற கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆவேசமாக விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவிலிருந்து வெளியேறி தற்போது திமுக சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வரும் பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என வேலுமணி பேசுவது வினோதமானது என குறிப்பிட்ட அக்ரி […]
தஞ்சை அருகே மஞ்சப்பேட்டை நடுத்தெருவை சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் விஜய் (20). அதே பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரது மகன் சுதர்சன் (19). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர். இதில் விஜய் தஞ்சையிலுள்ள தனியார் கல்லூரியிலும், சுதர்சன் திருப்பூரில் உள்ள தனியார் கல்லூரியிலும் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயின்று வந்தனர். சிறந்த கபடி வீரர்களான இருவரும் உள்ளூர் மற்றும் வெளியூர் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வந்துள்ளனர். இந்நிலையில், செங்கிப்பட்டி […]
மனித குலத்தின் மிக அவசியமான தேவைகளில் உணவு முதலிடத்தைப் பிடித்திருந்தாலும், உலக அளவில் ஒவ்வொரு நாளும் பல கோடி டன்கன் கணக்கில் உணவு பெருமளவில் வீணடிக்கப்பட்டு வருகிறது. இது பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பெரும் சவாலாக மாறுவதோடு, மறுபுறம் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடுவதையும் உலகளவில் மிகப்பெரிய முரணாகப் பார்க்க முடிகிறது. சர்வதேச தரவுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) சமீபத்திய அறிக்கைகளின்படி, உலக அளவில் அதிகளவில் […]
அன்றாட உணவுப் பொருட்களின் தரம் குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன. பால், பிஸ்கட் மற்றும் உலர் திராட்சை தொடர்பான ஏராளமான சிக்கல்களை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். டோட்லா டெய்ரி, பிரியாகோல்ட் பிஸ்கட் தயாரிக்கும் சூர்யா ஃபுட் & அக்ரோ மற்றும் யூயர் ஆர்கானிக் ஃபுட்ஸ் ஆகியவை அடங்கும். விசாரணையின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகளைத் தொடர்ந்து, இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல உணவு வணிக நிறுவனங்களுக்கும் […]
வங்கதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புகழ்பெற்ற காக்ஸ் பஜார் (Cox’s Bazar) கடற்கரை சுற்றுலாத் தலத்தில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் பலத்த காயமடைந்துள்ள நிலையில், விடுதியில் இருந்த பலர் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. காக்ஸ் பஜாரின் மரினா டிரைவ் பகுதியில் உள்ள இனானி – […]
குழந்தைகளுக்கு இணையத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன்படி, சிறுவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதற்கு வயது அடிப்படையில் முழுமையான தடை விதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21 மற்றும் பிரிவு 19(1)(a)-இன் கீழ் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இணையத்தைப் பயன்படுத்த உரிமை உள்ளது போல, வயது வித்தியாசமின்றி குழந்தைகளுக்கும் அதே […]
உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில், கணவன், மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஃபுட் பாய்சன் காரணமாக இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிரேட்டர் நொய்டா அருகே உள்ள ரபுபுரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நகலா ஸ்ரீ பதம் கிராமத்தில்தான் இந்தச் சோகச் […]
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகளுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த கடுமையான பொருளாதார தடைகள் மற்றும் 100 சதவீதம் வரை வரி விதிக்கும் மிரட்டலை அதிபர் டிரம்ப் விலக்கிக் கொண்டுள்ளார். இந்த அதிரடி முடிவின் மூலம் இந்தியா, சீனா மற்றும் பல நாடுகளுக்குப் பெரிய அளவில் நிவாரணம் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் தேசிய நலனைக் காரணம் காட்டி, வெள்ளிக்கிழமை இந்தத் தளர்வுக்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். ‘ரஷ்யா மற்றும் ஈரான் […]
மறைந்த புகழ்பெற்ற இசையமைப்பாளர் ‘தேனிசை தென்றல்’ தேவாவின் உடலுக்கு தமிழக அரசின் சார்பில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் இசை உலகிற்கு அவர் ஆற்றிய பொன்னான சேவையைப் போற்றும் வகையிலும், அவரது கலைப் பங்களிப்பைச் சிறப்பிக்கும் வகையிலும் இந்த உயரிய மரியாதை அளிக்கப்படுகிறது. அரசியல் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் நேரில் அஞ்சலி: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தேவாவின் இல்லத்தில் […]

