இருசக்கர வாகனத்தில் சிறுமியிடம் முகவரி கேட்பதை போல சிலுமிசம் செய்த இளைஞர்…..! கடைசியில் நடந்ததை பாருங்கள்….!

முன்பெல்லாம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் சீண்டலில் யாராவது ஈடுபட்டால், உடனடியாக பெண்களும் சரி, குழந்தைகளும் சரி உதவிக்காக மற்றவர்களை அழைப்பார்கள் ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது.

ஒருபுறம் அவர்களின் தைரியத்தையும், தன்னம்பிக்கையயும் பாராட்டினாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபடுபவர்களை மாநில அரசும், மத்திய அரசும் அலட்சியமாக எடுத்துக் கொள்கிறதோ, என்ற கேள்வியும் மனதில் எழுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை தென்கடம்பந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (29) ஸ்ரீபெரும்புதூரில் இருக்கின்ற தனியார் கைப்பேசி உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ள முள்ளுவாடி கிராமத்தில் இருக்கின்ற தடைய நண்பர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார்.

அப்போது வழியில் அதே பகுதியைச் சார்ந்த ஒரு 13 வயது சிறுமி பேனா வாங்குவதற்காக கடைக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் ஏரிக்கரை ஓரமாக இருக்கக்கூடிய சாலையில் சிறுமி சைக்கிளில் தனியாக வந்து கொண்டிருந்ததை கண்ட அந்த இளைஞர் அந்த சிறுமியை நிறுத்தி தன்னுடைய நண்பனின் வீட்டிற்கு செல்வதற்கு விலாசம் கேட்டுள்ளார்.

ஆகவே சிறுமி சைக்கிளை நிறுத்திவிட்டு கீழே இறங்கி விலாசம் தெரிவித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று மணிகண்டன் சிறுமியிடம் பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத சிறுமி இளைஞரை எதிர்த்து செயல்பட்டு அருகில் இருப்பவர்களின் உதவிக்காக கூச்சலிட்டார்.

சிறுமியின் இது போன்ற நடவடிக்கைகளால் அதிர்ந்து போன இளைஞர், அங்கு இருந்து தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றார் அந்த சூழ்நிலையிலும் கூட தெளிவாக செயல்பட்ட சிறுமி இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை குறித்து வைத்துக்கொண்டார்.

உடனடியாக வீட்டிற்கு சென்று தன்னுடைய தந்தையிடம் நடந்தவற்றை தெரிவித்தார். உடனடியாக சிறுமையின் தந்தை சிறுமியை அழைத்துக்கொண்டு புகார் வழங்குவதற்காக ராணிப்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்தார். அப்போது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் சிறுமியை தாண்டி தன்னுடைய வாகனத்தில் சென்றுள்ளார்.

இதனை பார்த்த சிறுமி உடனடியாக இது தொடர்பாக தந்தையிடம் தெரிவித்தவுடன் அவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அந்த இளைஞரை துரத்திச் சென்றார். சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் பைக்கில் திறப்புச் சென்ற நிலையில், அந்த இளைஞர் தப்பிச் சென்று விட்டார்.

இளைஞரை இருசக்கர வாகனத்தில் துரத்தி செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கின்றன. இந்த புகாரின் அடிப்படையில் ராணிப்பேட்டை மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் மணிகண்டனை கைது செய்து மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இக்கட்டான சூழ்நிலையிலும் தைரியமாக செயல்பட்ட சிறுமியையும், சிறுமிக்கு துணையாக இருந்த தந்தையையும் காவல்துறையினர் வெகுவாக பாராட்டி உள்ளனர்.

Next Post

நம்ப வைத்து ஏமாற்றிய த்ரிஷா..!! லியோ படத்தில் இருந்து திடீர் விலகல்..? ரசிகர்கள் பயங்கர ஷாக்..!!

Tue Feb 7 , 2023
தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று ’லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய் நாயகனாக நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லியோ படத்தின் புரோமோ மற்றும் அடுக்கடுக்கான அப்டேட்டுகளும் கடந்த வாரம் வெளியாகி சோஷியல் மீடியாவையே அதிரவைத்தது. தற்போது காஷ்மீரில் அப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. லியோ படத்தில் நடிக்க த்ரிஷா கமிட்டாகி உள்ளார். ஏற்கனவே விஜய் உடன் குருவி, […]
நம்ப வைத்து ஏமாற்றிய த்ரிஷா..!! லியோ படத்தில் இருந்து திடீர் விலகல்..? ரசிகர்கள் பயங்கர ஷாக்..!!

You May Like