காதலித்து வந்த இளைஞர் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த நிலையில், தற்போது சாதியை காரணமாகக் கூறி திருமணத்திற்கு மறுப்பதாக இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பல இடங்களுக்கு தன்னை அழைத்துச் சென்று நெருக்கமாக பழகிவிட்டு தற்போது தன்னை சந்திப்பதையும் தவிர்ப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளம்பெண் தனது குடும்பத்தினருடன் சென்று மனு அளித்த சம்பவம் பரபரப்பை […]
தமிழக அரசியலில் முதல்வர் விஜய்க்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. சட்டப்பேரவையில் விஜய் பேசிய விவகாரத்துக்கு பதிலளித்த ஸ்டாலின், அவசரநிலை காலத்தில் தான் கைது செய்யப்பட்ட பின்னணி குறித்து விரிவாக பதிவிட்டதுடன், தனது தாடையை சுட்டிக்காட்டிய விஜய்யின் சைகைக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், அவசரநிலை காலத்தில் தனது கைது குறித்து விஜய் குறிப்பிட்டது சரிதான் என ஸ்டாலின் குறிப்பிட்டார். ஆனால், […]
தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்கான முயற்சியாக, தமிழக முதல்வர் விஜய் லண்டனுக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தின் தொழில் வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் இந்தப் பயணம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து பயணிகள் விமானம் மூலம் முதலில் துபாய்க்கு சென்ற முதல்வர் விஜய், அங்கிருந்து லண்டனுக்கு புறப்பட்டுள்ளார். இந்தப் பயணத்தில் தனி விமானத்தை பயன்படுத்தாமல், வழக்கமான பயணிகள் விமானத்திலேயே […]
காணாமல் போன இரு மகன்களை மீட்பதற்காக பீகாரைச் சேர்ந்த தம்பதி எடுத்த முடிவு தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மகன்களைத் தேடும் பணியில் காவல்துறையுடன் இணைந்து முயற்சி மேற்கொண்ட அவர்கள், தாங்களும் பிச்சைக்காரர்களைப் போல வேடமிட்டு பல மாநிலங்களில் சுற்றித் தேடியுள்ளனர். இறுதியில் இரு மகன்களையும் தனித்தனியாக கண்டுபிடித்து மீட்டுள்ளனர். குஜராத் மாநிலம் முந்த்ரா பகுதியில் வசித்து வந்த அந்தத் தம்பதியின் 14 வயது மகன் ராகுல், 11 வயது […]
செங்கோட்டை தாக்குதல் தொடர்பான விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதி ஜசீர் பிலால் வானி, ராக்கெட் மற்றும் வெடிகுண்டு சாதனங்களை உருவாக்குவது குறித்து YouTube மற்றும் ChatGPT மூலம் தகவல்களைத் தேடியதாக தேசிய புலனாய்வு முகமை (NIA) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் பயங்கரவாத வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ராக்கெட் அல்லது வெடிகுண்டு சாதனங்களை உருவாக்குவது தொடர்பாக ஆய்வு செய்த சம்பவம் […]
தலைவலி, முதுகுவலி, தசை வலி அல்லது மூட்டு வலி ஏற்பட்டவுடன் உடனடி நிவாரணத்துக்காக வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்வது பலரின் வழக்கமாக உள்ளது. ஆனால், அவ்வப்போது எடுத்துக்கொள்வது தொடர்ந்து பயன்படுத்தும் பழக்கமாக மாறும்போது, சிலருக்கு சிறுநீரகத்தின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். சில வகையான வலி நிவாரண மருந்துகளை அதிக அளவில் அல்லது நீண்ட காலம் பயன்படுத்தும்போது, சிறுநீரகங்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு அவற்றின் செயல்பாட்டை […]
காலையில் எழுந்தவுடன் ஒரு கப் காபி குடிப்பதை பலரும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். எஸ்பிரெஸ்ஸோ, கேப்புசினோ, லாட்டே, அமெரிக்கானோ என காபியை ரசிக்க பல வகைகள் இருந்தாலும், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துபவர்கள் மத்தியில் சமீபகாலமாக ‘புல்லட் புரூஃப் காபி’ என்ற புதிய வகை பிரபலமாகி வருகிறது. நடிகை பாக்யஸ்ரீயும் தனது தினசரி ஆரோக்கிய வழக்கத்தில் இந்த காபியை சேர்த்திருப்பது குறித்து முன்பு பகிர்ந்துள்ளார். சாதாரண பிளாக் காபியிலிருந்து புல்லட் […]
இங்கிலாந்தில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவையில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. லண்டன் ஹீத்ரோ, கேட்விக், மான்செஸ்டர், ஸ்டான்ஸ்டெட் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் ஏராளமான விமானங்கள் தாமதமாகின அல்லது ரத்து செய்யப்பட்டன. விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவையை வழங்கும் NATS நிறுவனத்தின் விமானச் செயலாக்க அமைப்பில் கோளாறு ஏற்பட்டதே இதற்கு காரணம். இதையடுத்து லண்டன் விமானத் தகவல் மண்டலத்தில் […]
அரசு மருத்துவமனைக்கு தடுப்பூசி போட அழைத்துச் செல்லப்பட்ட 2 வயது பெண் குழந்தை, ஊசி செலுத்திய சில நிமிடங்களிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்கு தவறான தடுப்பூசி செலுத்தப்பட்டதே மரணத்துக்கு காரணம் என பெற்றோர் குற்றம்சாட்டியதுடன், மருத்துவமனை வளாகத்தில் திரண்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக அவரது தந்தை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த மருத்துவர் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார். தடுப்பூசி […]
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகரில் பர்னிச்சர் கடை நடத்தி வந்த 53 வயது நபர், வேலைக்கு வந்த கல்லூரி மாணவியை தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக அத்துமீற முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணையில், கடையில் ஏற்கனவே பணியாற்றிய 4 பெண்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி, அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். திங்கள் நகரில் ‘அன்னை வேளாங்கன்னி எண்டர்பிரைசஸ்’ என்ற பெயரில் பர்னிச்சர் கடை […]

