காயம் காரணமாக இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா 2026 போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். இதனால், நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய ஈட்டி எறிதல் அணியில் அவருக்குப் பதிலாக யஷ்வீர் சிங் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய தடகளக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற யஷ்வீர் சிங், கடந்த ஜூலை மாதம் கிளாஸ்கோவில் 85.41 மீட்டர் தூரம் வீசி தனது தனிப்பட்ட சிறந்த சாதனையைப் பதிவு செய்துள்ளார். […]

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ GSLV-F17 ராக்கெட் மூலம் EOS-05 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி மீண்டும் ஒரு வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து நள்ளிரவு 2:55 மணியளவில் இந்த ராக்கெட் ஏவப்பட்டது. பலத்த மழைக்கு மத்தியிலும், 51.7 மீட்டர் உயரமும் 420 டன் எடையும் கொண்ட ஜிஎஸ்எல்வி-எஃப்17 ராக்கெட், நள்ளிரவு வானத்தைப் பிளந்துகொண்டு கம்பீரமாக விண்ணை நோக்கிப் […]

துபாயில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசிய கோப்பை T20 போட்டியில் ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடி 64 பந்துகளில் 124 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற உலக சாதனையை படைத்துள்ளார். முன்னாள் இந்திய கேப்டன் மிதாலி ராஜின் (10,868 ரன்கள்) சாதனையை முறியடித்து, தனது […]

நேபாள திடீர் வெள்ளத்தால் 1200க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், திபெத் மற்றும் நேபாள எல்லைப் பகுதியில் இன்று ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையத்தின்தகவல்படி, இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த அதிர்வால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் அல்லது சொத்துச் சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. உள்ளூர் நேரப்படி பிற்பகல் […]

காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலுரை வழங்க முதல்வர் நன்றாக தயாராகி வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு நான் தயாராக இருக்கிறேன் ஆனால், நீங்க யாரும் ஓடிவிடக்கூடாது என்று முதல்வர் விஜய் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் துறைகளான தமிழ்நாடு காவல்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைகளின் மானிய கோரிக்கை மிதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விவாதத்தில் […]

தனியார் இருசக்கர வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை ‘பைக் டாக்ஸி’யாக இயக்க மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். பைக் டாக்ஸி சேவைகளை ஊக்குவிப்பதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 8 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் கிடைக்கும் என்றும், குறிப்பாக கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்த மக்களுக்கு இது கூடுதல் வருமானத்தை ஈட்டித் […]

பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை சுட்டுவீழ்த்தி, வீரச் சக்ரா விருது பெற்ற இந்திய விமானப்படையின் முன்னாள் குரூப் கேப்டன் அபிநந்தன் வர்த்தமான், கோவாவை தளமாகக் கொண்டு இயங்கும் FLY91 என்ற தனியார் பிராந்திய விமான நிறுவனத்தில் பைலட்டாக இணைந்துள்ளார். அபிநந்தன் வர்த்தமான் கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் இந்திய விமானப்படை சேவையிலிருந்து ஓய்வுபெற்று, ஆகஸ்ட் மாதத்தில் ‘ஃப்ளை91’ நிறுவனத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஃப்ளை91 நிறுவனத்தின் செய்தித் […]

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் தோல்வி மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்ததாகக் கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கின் பின்னணி: சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் சுமார் […]

2027 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரை முன்னிட்டு, இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் எதிர்காலம் குறித்து இன்று நடைபெறும் பிசிசிஐ ஆய்வுக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது. இங்கிலாந்து தொடரின் கடைசி ஒருநாள் போட்டிக்கு பிறகு ஓய்வு அறிவிக்குமாறு தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் ரோஹித்திடம் கேட்டுக் கொண்டதாக ஆங்கில செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது. இந்த வழிகாட்டுதலால் ரோஹித் சர்மா […]

மகாராஷ்டிராவில் 200 ஆண்டுகளுக்குப் பிறகு (சுமார் 4 தலைமுறைகள்) பெண் குழந்தை பிறந்ததை அடுத்து, அக்குழந்தையை ரதத்தில் வைத்து மேளதாளங்கள் மற்றும் நடனத்துடன் குடும்பத்தினர் விமர்சையாக வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் நான்கு தலைமுறைகளுக்குப் பிறகு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குத் திரும்பிய ‘கார்கி’ என்ற அந்தப் பெண் குழந்தைக்கும், அவரது தாயாருக்கும் குடும்பத்தினர் பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்துள்ளனர். […]