fbpx

வேலைவாய்ப்பு!… மத்திய அரசில் 1261 காலிப்பணியிடங்கள்!… மிஸ் பண்ணிடாதீங்க!… விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சுகாதாரத் துறை – மெடிக்கல் ஆபிசர்: 584, ரயில்வே துறை – உதவி டிவிஷனல் மெடிக்கல் அலுவலர்: 300, டெல்லி முனிசிபல் கவுன்சில் – மெடிக்கல் அலுவலர்: 376 என காலியாக உள்ள மொத்தம் 1261 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் மருத்துவத் துறையில் எம்.பி.பி.எஸ் முடித்திருக்க வேண்டும். 2023 ஆகஸ்ட் 1 ஆம் தேதி அடிப்படையில் விண்ணப்பதாரரின் வயது 35க்குள் இருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு, பெர்சனாலிட்டி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். upsc.gvo.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவினர் ரூ.200 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், விண்ணப்பிக்க கடைசி நாள் 09.05.2023 ஆகும்.

Kokila

Next Post

உங்கள் லேப்டாப்பில் அடிக்கடி இந்த பிரச்சனை ஏற்படுகிறதா?... சரிபார்க்க வேண்டிய 5 விஷயங்கள் இதோ!...

Fri Apr 28 , 2023
நீங்கள் பயன்படுத்தும் மடிக்கணினி சரியாக சார்ஜ் ஆகாமல் இருந்தால், நீங்கள் சரிபார்க்க வேண்டிய 5 விஷயங்களை இங்கே பார்க்கலாம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் மடிக்கணினி என்ற லேப்டாப் சில சமயங்களில் பிரச்சனைக்கு உள்ளாவது உண்டு. சில சமயங்களில் சார்ஜ் ஆகாமல் இருக்கும். ​​இதற்குப் பின்னால் சில காரணங்கள் இருக்கலாம். அதைச் சரிசெய்ய உங்கள் மடிக்கணினியை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்வதற்கு முன்பு, நீங்கள் சரிபார்க்க வேண்டிய 5 விஷயங்களை இங்கே […]

You May Like