fbpx

அமெரிக்காவின் பால் பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. 18,000 பசுக்கள் பலி…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சவுத்ஃபோர்க் டெய்ரி என்ற பால் பண்ணையில் நேற்று மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.. இதில் 18,000 க்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்தன. இந்த சம்பவம் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட மிக மோசமான தீ விபத்தாக கருதப்படுகிறது.. எனினும் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாக வில்லை.. மேலும் அந்த பண்ணையை வைத்திருக்கும் குடும்பத்தினர் சம்பவம் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்காக பண்ணைக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

இதனிடையே அமெரிக்காவின் விலங்குகள் நல நிறுவனம் (AWI) ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பண்ணை விலங்குகளை கொல்லும் கொட்டகை தீயைத் தடுக்க புதிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. ஒரு சில அமெரிக்க மாநிலங்கள் மட்டுமே தீ பாதுகாப்பு குறியீடுகளை பின்பற்றி வருகின்றனர்.. எனினும் தீ விபத்தில் இருந்து விலங்குகளை பாதுகாக்க எந்த கூட்டாட்சி விதிமுறைகளும் இல்லை என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தீ விபத்துகளில், டெக்சாஸ் பண்ணையில் ஏற்பட்ட தீ, ய மிகவும் அழிவுகரமான தீ விபத்தாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தகக்து..

Maha

Next Post

வரலாறு காணாத புதிய உச்சம்.. தமிழ் புத்தாண்டில் பெண்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை....

Fri Apr 14 , 2023
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.45,760க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இதனால் தங்கம் விலை […]
gold

You May Like