குஜராத் மாநிலம் காந்திநகரில், 27 வயதான சஞ்சய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயதான ஜெயேஷ் தாக்கூர் என்ற சகோதரர் உள்ளார். இவர்களின் தந்தை, கடந்த 15 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இந்நிலையில், சகோதரர்கள் இருவரும் தங்களின் தாயுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களின் தாய்க்கு 45 வயதான ரத்தன்ஜி தாக்கூர் என்பவருடன் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது.
ஒரு கட்டத்தில், ரத்தன்ஜி தாகூரின் கள்ள உறவு குறித்து இவரது மகன்களான சஞ்சய்க்கும், ஜெயேஷுக்கும் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மகன்கள், தங்களின் தாய், மறைந்த தந்தையை அவமதிப்பதாகவும், குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்துவதாகவும் கடும் கோபத்தில் இருந்துள்ளனர். மேலும், தங்கள் தாயிடமிருந்து விலகி இருக்குமாறு, சகோதரர்கள் இருவரும் ரத்தன்ஜியை பலமுறை எச்சரித்துள்ளனர்.
ஆனால், யார் சொல்வதையும் கண்டுக்கொள்ளாமல், ரத்தன்ஜி தொடர்ந்து அந்த சகோதரர்களின் தாயுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த சஞ்சய் மற்றும் ஜெயேஷ் ஆகிய இரண்டு பேரும், ரத்தன்ஜியை பழிவாங்க முடிவு செய்துள்ளனர். அதன் படி, சகோதர்கள் இருவரும் கத்தி மற்றும் தடியுடன் ரத்தன்ஜி இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளனர்.
பின்னர் அங்கிருந்த ரத்தன்ஜியின் வயிற்றில் குத்தியுள்ளனர். இதில், ரத்தன்ஜியின் வயிற்றில் இருந்து குடல் வெளியேறியுள்ளது. ஆனாலும் அப்போதும் ஆத்திரம் அடங்காத சகோதர்கள் இருவரும், அந்த குடலை எடுத்து வெளியே வீசியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ரத்தன்ஜி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த இரண்டு சகோதரர்கள் சஞ்சய் மற்றும் ஜெயேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.