fbpx

17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த 27 வயது திருமணமான பெண்..! 

ஓசூர் பெரிய நகரத்தில் தொழிலாளியாக வசித்து வருபவர் எல்லப்பா. இவரது 17 வயது மகன் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். சிறுவனுக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராமகிருஷ்ண ரெட்டி மனைவி அர்ச்சனா (27) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது.

பின்னர் இறுதியில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு, கணவன் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு, அந்த சிறுவனுடன் அர்ச்சனா பெங்களூரு சென்றார். 

இருவரும் பொத்தனஹள்ளியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அதன்பின் கணவன் அர்ச்சனாவை அங்கும் இங்கும் தேடினர். அவர் இருக்கும் இடத்தை அறிந்த உறவினர்கள் அவரை கண்டுபிடித்து மீட்டனர். 

பின்னர் அந்த சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளனர். பலத்த காயம் அடைந்த சிறுவனை பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சிறுவனை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுவனின் பெற்றோர் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Rupa

Next Post

காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற பிரதமர்.. அபராதம் விதித்த காவல்துறை..

Sat Jan 21 , 2023
ஓடும் காரில் சீட் பெல்ட் அணியாததற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.. இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தற்போது இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்து வருகிறார்.. இந்நிலையில் காரில் பயணிக்கு சீட் பெல்ட் அணியாத காரணத்திற்காக ரிஷி சுனக்கிறகு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.. பிரதமர் ரிஷி சுனக் 100-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்துவதற்காக காரில் பயணித்த படி வீடியோ மூலம் […]

You May Like