fbpx

#JustIn : வரும் 27-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. இந்த மாவட்டத்திற்கு மட்டும் தான்…

பழனி கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜனவரி 27-ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் திகழ்கிறது.. இந்த கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.. இதனை முன்னிட்டு மலைக்கோவில் உள்ள தங்க விமானம், தங்க சப்பரம், தங்க மயில், தங்க தேர் மற்றும் பிரகாரங்களில் உள்ள சுவாமி சன்னதிகள் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட்டுள்ளன..

யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கிய நிலையில், இந்த கும்பாபிஷேக விழாவை நேரில் காண 6,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து கடந்த 3 நாட்களாக இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் பணி நடைபெற்றது.. 60,000-க்கு மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்த நிலையில் நேற்று மாலை குலுக்கல் முறையில் 2000 பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.. இந்த பக்தர்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது..

இந்நிலையில் பழனி கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜனவரி 27-ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களு விடுமுறை அளிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 25-ம் தேதி பணி நாளாக கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

அஜித் படத்தை பார்த்து பட்டப்பகலில் வங்கியில் புகுந்து கொள்ளை..!! ஊழியர்களின் முகத்தில் மிளகாய் பொடி..!!

Tue Jan 24 , 2023
துணிவு உள்ளிட்ட திரைப்படங்களை பார்த்து வங்கியில் பட்டப்பகலில் இளைஞர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் வழக்கம் போல ஒரு பெண் உட்பட 4 ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளனர். அப்போது, திடீரென வங்கியில் புகுந்த வாலிபர் ஒருவர், ஊழியர்களை மிரட்டி கட்டிப் போட்டுள்ளார். பின்னர், அவர்கள் மீது மிளகாய் பொடி ஸ்பிரே அடித்து வங்கியில் […]
அஜித் படத்தை பார்த்து பட்டப்பகலில் வங்கியில் புகுந்து கொள்ளை..!! ஊழியர்களின் முகத்தில் மிளகாய் பொடி..!!

You May Like