fbpx

28 தமிழக மீனவர்கள் டிசம்பர் 10-ம் தேதி விடுவிப்பு… அண்ணாமலை கடிதத்திற்கு மத்திய அமைச்சர் பதில்..!

எல்லை தாண்டிச் சென்றதாக பஹ்ரைன் அரசால் கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்கள் டிசம்பர் 10-ம் தேதி விடுவிக்கப்படுவார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.

எல்லை தாண்டிச் சென்றதாக பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரால் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு செப்.20-ம் தேதி அண்ணாமலை கடிதம் அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்துக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில்; பஹ்ரைன் அரசால் கைது செய்யப்பட்டுள்ள 28 தமிழக மீனவர்களும் டிசம்பர் 10-ம் தேதி விடுவிக்கப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களை விடுவிப்பது தொடர்பான நடைமுறைகள் முடிவடைந்த பிறகு, இந்தியா திரும்புவார்கள். இந்திய தூதரகம் அனைத்து விதமான உதவிகளையும் மீனவர்களுக்குச் செய்து வருகிறது என தெரிவித்துள்ளார்

English Summary

28 Tamil Nadu fishermen to be released on December 10th… Union Minister responds to Annamalai’s letter

Vignesh

Next Post

உங்க பர்ஸில் இந்த ஒரு பொருளை மட்டும் வைங்க... ஒருபோதும் பணம் குறையவே குறையாதாம்..

Thu Dec 5 , 2024
வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பை ஈர்க்க உதவும் வகையில் பல்வேறு கொள்கைகளும் விதிகளும் வாஸ்து சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கான தீர்வுகள் பற்றியும் வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது. அந்த பண வரவை என்ன செய்ய வேண்டும், உங்கள் பர்ஸில் என்ன வைக்க வேண்டும்? வைக்கக்கூடாது என்பது குறித்தும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் பணம் பெருகவும், செல்வ செழிப்பை அதிகரிக்க உங்கள் பர்ஸில் ஒரு பொருளை வைத்தால் போதும் […]

You May Like