fbpx

வரப்போகின்ற புத்தாண்டில் அதிர்ஷ்டம் கொட்டப் போகும் 3 ராசிகள்.! உங்க ராசியும் இதில் இருக்கா.?

இன்னும் ஒரு மாதத்தில் 2024 ஆம் ஆண்டு பிறந்துவிடும். நாம் ஒவ்வொருவரும் புதிய லட்சியங்களுடன் புதிய ஆண்டில் கால் அடி எடுத்து வைக்க இருக்கிறோம். வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் செல்வ வளம் ஆகியவை பெரும்பாலானோரின் கனவாக இருக்கும். புதிய வருடத்தில் கிரகணங்களும் அவற்றில் ஏற்படும் மாற்றங்களும் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு மிகச் சிறப்பான ஆண்டாக அமைய இருக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்ய இருப்பதால் மேஷ ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மதிப்புகள் அதிகம் கிடைப்பதோடு முடியாமல் இருக்கக் கூடிய அவர்களது வேலைகளும் விரைவாக முடிய வாய்ப்பு இருக்கிறது. மேஷ ராசி மாணவர்களுக்கு அவர்கள் கனவுகள் நிறைவேறும் பாக்கியமும் இருக்கிறது. இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டு பயணம் கைகூடவும் வாய்ப்பு இருப்பதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

சிம்ம ராசிக்காரர்களுக்கும் வருகின்ற புத்தாண்டு மிகச் சிறப்பான ஆண்டாக அமைகிறது. இந்தப் புது வருடத்தில் குரு ஒன்பதாவது வீட்டில் பயணிப்பார். இதனால் இவர்களுக்கு லாட்டரி மற்றும் பங்குச்சந்தை தொடர்பான வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் கிடைப்பதோடு இவர்கள் தொடங்கும் வியாபாரமும் சிறந்து விளங்கும். பரம்பரை சொத்து தொடர்பான சிக்கல்கள் வந்தாலும் சிம்ம ராசிக்காரர்களுக்கு வெற்றி உறுதி.

தனுசு ராசிக்காரர்களுக்கும் வருகின்ற ஆண்டு சிறப்பான ஆண்டாகவே அமைந்திருக்கிறது. வருகின்ற 2024 ஆம் ஆண்டில் திருமணம் ஆகாத அவர்களுக்கு நல்ல முறையில் திருமணம் நடைபெறும். குரு பெயர்ச்சி இவர்களது நிதி நிலையை மேம்படுத்தும். வேலை தேடிக் கொண்டிருபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு நிச்சயமாக வரும். வேலை நிதி நிலைமை மற்றும் ஆரோக்கியம் என அனைத்தும் தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதமாக அமையும் ஆண்டாக 2024 அமைந்திருக்கிறது.

Next Post

நோய் எதிர்ப்பு சக்தியை டக்குன்னு அதிகரிக்க, சிம்பிளா ஒரு ஜூஸ் ஷாட்ஸ்.! .!

Sat Nov 25 , 2023
குளிர்காலத்தில் அடிக்கடி சளி இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற உபாதைகள் ஏற்படக்கூடும். இவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் எளிமையான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த ஜூஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம். இதற்கு ஒரு ஆரஞ்சு பழம், சிறிது மஞ்சள் சிறிய அளவில் இஞ்சி, பாதி எலுமிச்சை பழம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு தோலை நீக்கி விட்டு நீக்கிய […]

You May Like