கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு மத்திய மாநில அரசு சார்பில் ரூ.30 லட்சம் நிதி உதவி கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கழிவுநீர் அகற்றும் படுகாயமடைந்து நிரந்தர உடல்பாதிப்பு ஏற்பட்டால் குறைந்தபட்ச இழப்பீடாக ரூ. 20லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
கழிவுநீர் அகற்றும் போது ஏற்படும் இறப்புகள் மற்றும் வழக்குகளை கண்காணிப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது. மணித கழிவுகளை மனிதரே அகற்றும் முறை ஒழிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
கழிவுநீர் அகற்றும் போது ஏற்படும் இறப்புகள் தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மணித கழிவுகளை மனிதரே அகற்றும் முறை ஒழிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டது.
தீர்ப்பை அறிவித்த நீதிபதி பட், துப்புரவுத் தொழிலாளிக்கு மற்ற குறைபாடுகள் ஏற்பட்டால் அதிகாரிகள் ரூ.10 லட்சம் வரை செலுத்த வேண்டும் என்றார். கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு மத்திய மாநில அரசு சார்பில் ரூ.30 லட்சம் நிதிஉதவி கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கழிவுநீர் அகற்றும் படுகாயமடைந்து நிரந்தர உடல்பாதிப்பு ஏற்பட்டால் குறைந்தபட்ச இழப்பீடாக ரூ. 20லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும் பல உத்தரவுகளை பிறப்பித்த பெஞ்ச், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய அரசு நிறுவனங்கள் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் மேலும், கழிவுநீர் அகற்றும் போது ஏற்படும் இறப்புகள் தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றங்கள் கண்காணிப்பதில் இருந்து தடை இல்லை என்றும் உத்தரவிட்டது.
ஜூலை 2022 இல் மக்களவையில் மேற்கோள் காட்டப்பட்ட அரசாங்கத் தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் சாக்கடைகள் மற்றும் செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்யும் போது 347 பேர் இறந்துள்ளனர்.