fbpx

பெற்ற தாயை துடிக்க துடிக்க அடித்தே கொலை செய்த மகன்….! காரணத்தை கேட்டு அதிர்ந்து போன காவல் துறையினர்….!

திருமணம் செய்து வைக்க தாமதம் செய்ததால், கடுப்பான இளைஞர், சொந்த தாய் என்று கூட பார்க்காமல், படுகொலை செய்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டத்தை அடுத்துள்ள பண்டா மைலாரம் கிராமத்தில், ஒரு 45 வயது மதிக்கத்தக்க பெண் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகன் என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில், மகனுக்கு திருமணம் செய்து வைக்க தாய் தாமதம் செய்து வந்தார். இதனால், ஆத்திரம் கொண்ட மகன், பெற்ற தாய் என்று கூட பார்க்காமல், செங்கல்லை கொண்டு, அவரை துடிக்கத், துடிக்க அடித்து கொலை செய்திருக்கிறார்.

அதன் பிறகு, காவல்துறையினரை குழப்புவதற்காக, கழுத்தை அறுத்து, கால்களை வெட்டி இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து, மகள் வழங்கிய புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தாயை பெற்ற மகனே அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

ஆகவே, அவருடைய மகன், மேலும், இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த உறவினர் ஒருவர், உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Post

மகிழ்ச்சி… விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு "சிவ சக்தி" என பெயரிட்டார் பிரதமர் மோடி…

Sat Aug 26 , 2023
சந்திராயன் 3 விண்களத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செயல்படுத்திய நிலையில், அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி. காலை 7 மணிக்கு பெங்களூரு வந்த பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றினார். பிரிக்ஸ் மாநாட்டில் இருந்ததால் சந்திராயன் விண்களம் தரையிறங்கியது நேரில் கண்டுகளிக்க முடியவில்லை, இருந்தாலும் காணொளி வாயிலாக சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்ததாக பிரதமர் தெரிவித்தார். மேலும் பிரதமர் பேசியபோது முக்கிய அறிவிப்பு […]

You May Like