fbpx

68 வயது மூதாட்டி கதற கதற கற்பழித்து கொலை கஞ்சா கும்பலின் துணிகரம்…..!

தூத்துக்குடி அருகே புகார் வழங்கியும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் அலட்சியம் காரணமாக, 68 வயது மூதாட்டியை கதற, கதற கற்பழித்து, கொலை செய்த மர்ம கும்பலால், அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் அம்பேத்கர் நகர் 2வது தெரு பகுதியை சேர்ந்தவர் அந்தோணியம்மாள் (68). இவருடைய கணவர் மற்றும் மகன் உள்ளிட்டோர் உயிரிழந்து விட்ட நிலையில், அந்தோணியம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இந்த சூழ்நிலையில் தான், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், அவருடைய வீட்டிற்கு வந்து,ஒரு கும்பல் கஞ்சா போதையில், மதுகுடித்துவிட்டு,ஐந்து சவரன் நகை மற்றும் பொருட்களை திருடி சென்றது. இது குறித்து, இரண்டு முறை அந்தோணியம்மாள் அந்த பகுதியில் இருக்கும் பெரியவர்களுடன், வாடபாகம் காவல் நிலையத்திற்கு சென்று, புகார் வழங்கியிருக்கிறார். ஆனால், காவல்துறையினர் இது தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

காவல்துறையினர் கண்டுகொள்ளாததால், துணிச்சலான அந்த கஞ்சா கும்பல், அந்தோணியம்மாள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரை கற்பழித்து, கொலை செய்து விட்டு, அதோடு, அவருடைய கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த தங்க நகைகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

நேற்று காலை வெகு நேரமான பின்னரும் அந்தோணியம்மாளின் வீடு திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்பு அந்த பகுதிக்கு வந்த காவல்துறையினர், அந்தோணியம்மாளின் வீட்டை உடைத்து, உள்ளே நுழைந்து பார்த்தபோது, அவர் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. ஆகவே உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

மேலும், தடயவியல் துறையினர், அந்தோணியம்மாளின் வீட்டில் சோதனை நடத்திய போது, வீட்டிற்கு வெளியே பித்தளை தோடுகளை அந்த கஞ்சா கும்பல் வீசி சென்றது தெரியவந்துள்ளது. வீட்டில் இருந்த அந்தோணியம்மாளை கற்பழித்து, கொலை செய்துவிட்டு, அவரிடம் இருந்த பொருட்கள் அனைத்தையும், கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

ஒருபுறம் இது பற்றிய விசாரணை காவல்துறையினரால், மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், மறுபுறம் காவல்துறையினர் அந்த மூதாட்டி முதலில் புகார் அளித்த போதே நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால், தற்போது அந்தோணியம்மாளுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்காது.

காவல்துறையினரின் அலட்சியம் காரணமாகத்தான், இந்த கொலை நடைபெற்றுள்ளது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, தமிழ் புலிகள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் கத்தார் பாலு குற்றம் சுமத்தி இருக்கிறார்.

Next Post

சந்தைகளில் ரூ.40-க்கு விற்பனை...! அதிரடியாக குறைந்த தக்காளி விலை...!

Sat Aug 19 , 2023
தக்காளி விலை குறைந்து வருவதை அடுத்து, ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மொத்த சந்தைகளில் தக்காளி விலை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஒரு கிலோ தக்காளியை ரூ.40 என்ற சில்லறை விலையில் விற்குமாறு தேசியக் கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு நுகர்வோர் விவகாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. ஜூலை 14 முதல் இன்று வரை 15 லட்சம் கிலோ தக்காளி […]

You May Like