fbpx

மாணவர்களே… முகக்கவசம் கட்டாயம்…! இல்லை என்றால் அனுமதி கிடையாது…! ஆட்சியர் அதிரடி அறிவிப்பு…

அரியலூரில் இன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாமிற்கு அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஐனா (DDU-GKY) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கிராமம் மற்றும் நகர்புறத்தில் உள்ள படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று அரியலூர் அரசினர் கலைக் கல்லூரியில் காலை 09 மணி முதல் மாலை 03 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் 5-ம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் படித்த வேலைவாய்ப்பற்ற 18 முதல் 45 வயது வரை உள்ள இளைஞர்கள் ஆண்/பெண் (இருபாலரும்) திரளாக கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் 10,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுடன் கலந்து கொள்ள உள்ளனர்.

தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஐனா (DDU-GKY) திட்டத்தின் கீழ் 20க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பினை இளைஞர்களுக்கு வழங்க உள்ளார்கள். வருகை தரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். அத்துடன் தங்களது சுய விபர குறிப்பு (Bio –Data) ஆதார் அட்டை நகல், கல்விச் சான்றிதழ் நகல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும்.

Vignesh

Next Post

2024 ஐபிஎல்லிலும் எம்.எஸ்.தோனி விளையாடுவார்!... சுரேஷ் ரெய்னா சுவாரஸ்ய பேட்டி!

Fri Mar 17 , 2023
ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் எதிர்காலம் குறித்து சுரேஷ் ரெய்னா சுவாரஸ்யமாக பேசியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இருந்து எம்எஸ் தோனி ஓய்வு பெறுவார் என்ற வதந்திகள் சில நாட்களாகவே பரவி வருகின்றன. 2023 ஆம் ஆண்டில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸை வழிநடத்தும் தோனி, பல சந்தர்ப்பங்களில் ஓய்வு பெறுவதைப் பற்றி சுட்டிக்காட்டினார். ஆனால் எந்த நேரத்திலும் உறுதியான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. […]

You May Like