fbpx

“என் பேச்ச கேட்காம போயிட்டல்ல…….”! வீம்பில் கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு!

திருச்சி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி அருகே உள்ள அரியமங்கலம் சீனிவாசன் நகர் 7வது தெருவை சார்ந்தவர் சோலையப்பன். 58 வயதான இவர் கூலி தொழிலாளியாக பணி செய்து வருகிறார். இவருக்கும் இவரது மாமனார் குடும்பத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இவரது சின்ன மாமியார் இறந்துள்ளார்.

அவரது இறுதிச் சடங்கிற்கு செல்ல வேண்டாம் என மனைவியிடம் கண்டிப்புடன் கூறியிருக்கிறார் சோலையப்பன். ஆனால் கணவனின் பேச்சைக் கேட்காமல் அவரது மனைவி குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு இறுதிச் சடங்கில் கலந்து விட்டு திரும்ப வந்திருக்கிறார். இதனால் மணமுடைந்த சோலையப்பன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவத்தை கேள்விப்பட்ட காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை தொடர்பாக அரியமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Baskar

Next Post

ஆபத்து..!! பாலில் கலப்படம் செய்தால் கண்டுபிடிப்பது எப்படி..? உடனே இதை செய்து பாருங்க..!!

Wed Mar 8 , 2023
கலப்பட பால் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கே.செந்தில்ராஜ் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”பாதுகாப்பற்ற, தரமற்ற, கலப்படம் செய்யப்பட்ட பாலை விற்பனை செய்வது உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்டம், 2006ன் கீழ் தண்டனைக்குரியது. விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க செயற்கையான அடர்த்தியை கூட்டவும் பாலில் அனுமதிக்கப்படாத ரசாயனங்கள், நிறமிகள், தண்ணீர் கலப்பது சட்டப்படி குற்றமாகும். இதற்கு ரூ.1லட்சம் அபராதமும், 6 மாத சிறை தண்டனையும் அளிக்கப்படும். தரமற்ற […]

You May Like