fbpx

“சோஷியல் மீடியால அப்லோட் பண்ணவா.”? மகளின் தோழியை பலவந்தமாக பாலியல் வண்புணர்வு.! ஆபாச புகைப்படங்களை வைத்து மிரட்டல்.!

ஒடிசாவில் தனது மகளின் தோழியை பாலியல் வன்புணர்வு செய்து, அவரது ஆபாச புகைப்படங்களை வலைத்தளங்களில் வெளியிட்ட 54 வயது ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில், பெண் ஒருவர் தனது தோழியின் வீட்டிற்கு கடந்த வருடம் சென்றிருந்தபோது, வீட்டில் அவரது தோழியும், தாயும் இருக்கவில்லை. அவர்கள் அருகில் சென்று இருப்பதாகவும், விரைவில் வந்துவிடுவார்கள் என்றும் கூறி, அந்த தோழியின் தந்தை காத்திருக்க சொல்லியிருக்கிறார். வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்தப் பெண்ணை, 54 வயதான அந்த தோழியின் தந்தை வன்புணர்வு செய்திருக்கிறார்.

இருப்பினும் அவரது தந்தை மன்னிப்பு கேட்டதால், பாதிக்கப்பட்ட பெண் நடந்த சம்பவத்தை வெளிப்படுத்தவில்லை. சில மாதங்களுக்கு முன்பு கட்டாக்கில் உள்ள அந்தப் பெண்ணின் உறவினர் வீட்டில் அவர் இருந்த போது, அதே நபர் மீண்டும் அந்த பெண்ணை வன்புணர்வு செய்திருக்கிறார். மேலும் அதனை தனது செல்போனிலும் படம் பிடித்துள்ளார்.

செல்போனில் உள்ள படங்களைக் காட்டி, உடல் சம்பந்தப்பட்ட தொடர்பை தொடரவில்லை எனில், அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாகவும் அச்சுறுத்தியுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணத்தைப் பற்றி அறிந்த அந்த தோழியின் தந்தை, மீண்டும் உடல்ரீதியான தொடர்பை தொடர வற்புறுத்தியுள்ளார். அந்தப் பெண் மறுத்த நிலையில், அவரது ஆபாச புகைப்படங்களை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.

நண்பர்களின் மூலம் இதை அறிந்த அந்த பெண், பானிகோயிலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தக் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர், லிசாராணி பிஸ்வால் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஐபிசி மற்றும் ஐடி சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Next Post

கொடுமையின் உச்சம்..!! 12 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை.! விசாரணையில் வெளியான உண்மை.!

Fri Feb 9 , 2024
நீலகிரி மாவட்டத்தில் பெற்ற தந்தையால் 12 வயது சிறுமி கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தாய் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் 12 வயது சிறுமி ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு உள்ளார். மேலும் அவருக்கு […]

You May Like