அமெரிக்க நாட்டில் மிச்சிகன் மாகாணத்தில் ஆண்ட்ரூ கிளார்க் – கரோலின் கிளார்க் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அதாவது ஆண்ட்ரூப் கிளார்க்கின் குடும்பத்தில் கடந்த 1885-க்கு பின் பிறந்த முதல் பெண் குழந்தை இதுவே ஆகும். இதுவரையில் ஆண் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ள நிலையில், தற்போது 138 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த அதிசய பெண் குழந்தை என்பதால் அதனை அவர்கள் குடும்பமே கொண்டாடி வருகின்றனர்.
இது குறித்து கரோலின் கிளார்க் கூறுகையில், “என் கணவர் குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்ததே இல்லை என அவர் கூறியதை முதலில் நான் நம்பவில்லை. இது குறித்து அவர் பெற்றோர்களிடம் கேட்டபோது தான் உண்மை என தெரிந்து கொண்டேன். கர்ப்பமாக இருக்கும் போது பெண் குழந்தை பிறக்குமா? ஆண் குழந்தை பிறக்குமா? என்று நாங்கள் யோசிக்கவில்லை. ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்பதையே நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியாக உணர்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.