பிரேசில் நாட்டில் மார்செல்லா எலன், 31 வயது , ‘மாடலிங்’ செய்து வருகின்ற நிலையில், தொழிலதிபர் ஜோர்டான் லோம்பார்டி ,40, காதலித்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்ததை தொடர்ந்து, ஜனவரியில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக, பிரேசிலியா நகரில் இருக்கும் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இருவருமே மது மற்றும் கஞ்சா புகைத்து உச்சகட்ட போதையை அடைந்துள்ளனர். இதனிடையே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஆத்திரம் அடைந்த மார்செல்லா, துப்பாக்கியை எடுத்து லோம்பார்டியின் கழுத்தில் சுட்டுள்ளார். பின்னர் , தான் நிர்வாணமாக இருக்கிறோம் என்பதைக் கூட மறந்து விட்டு, காரை எடுத்துக் கொண்டு தப்பி சென்றுள்ளார். வழியில் கார் நின்று விட்டதன் காரணமாக, வழியாக வந்த ஒரு லாரியை மடக்கி, டிரைவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி அதில் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
சிறிது துாரம் சென்றவுடன் பெட்ரோல் போட வேண்டும் என்று கூறி லாரியை ஓரம் கட்டி விட்டு டிரைவர் தப்பி ஓடி சென்று போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கே விரைந்து வந்த போலீசார் மார்செல்லாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.