மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, பெற்ற மகளையே கொடூரமாக கொலை செய்த தந்தையால், ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், மார்க்கண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த பூசிராஜு, நரசிம்மா தம்பதிகளுக்கு, கடந்த 16 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். பூசிராஜு மது, கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையானதால், அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.
ஆகவே, கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, நரசம்மா தன்னுடைய குழந்தைகளோடு, வீட்டை விட்டு வெளியேறி, தன்னுடைய சகோதரருடன் வசித்து வந்தார். மேலும் தன்னுடைய மூத்த மகள் மஞ்சுளா(13) என்பவரை பள்ளியில் விட்டு செல்வது வழக்கம் என சொல்லப்படுகிறது. அதேபோல மீண்டும் அவருடைய வேலையை முடித்துக் கொண்டு, மாலையில் வந்து தன்னுடைய மகளை அழைத்துச் செல்வார்.
இந்நிலையில்தான் மகளை அழைத்துச்செல்வதற்க்காக, ஒரு நாள் பள்ளிக்குச் சென்றபோது, அவர் ஏற்கனவே தன்னுடைய தந்தையுடன் சென்றுவிட்டதாக பள்ளி நிர்வாகிகள் கூறி இருக்கிறார்கள். இதனால், பதற்றமான நரசம்மா, அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். இதற்கு நடுவே, பூசிராஜு தன்னுடைய மகளை பாறை இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்று பாறையில் மோதி, கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து, தன்னுடைய கணவர் இருப்பிடத்தை தேடிச் சென்ற நரசம்மா, அங்கே மகள் சடலமாக கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்னர், குழந்தையை கொலை செய்து விடுவேன் என்று கணவர் மிரட்டியதாக கூறிய அவர், இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்த அவர்கள், அந்த சிறுமியை பூசிராஜு தான் அழைத்துச் சென்றார் என்பதை உறுதி செய்து, தப்பி சென்ற பூசிராஜுவை கைது செய்துள்ளனர்