fbpx

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் வாயை பொத்தி கூட்டு பலாத்காரம்..!! போலீஸ் ஸ்டேஷனுக்கு பதறியடித்து ஓடியதால் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த காளவாசல் பகுதியில் செங்கல் சூளைகள் இயங்கி வருகிறது. அங்கு வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், அங்கு பணியாற்றி வந்த 30 வயது மதிக்கத்தக்க கணவரை இழந்த பெண் தனது 2 குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த பெண் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அந்தப் பெண்ணின் வாயை பொத்தி சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளனர். பின்னர், அவரை கட்டாயமாக கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

இந்நிலையில், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அந்தப் பெண் உடனே மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். கணவனை இழந்த பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

ரூ.1,000 பணம் இன்னும் உங்களுக்கு வரவில்லையா..? நாளை முதல் இதை பண்ணுங்க..!!

Sun Sep 17 , 2023
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் உங்களுக்கு இன்னும் பணம் வரவில்லை என்றால் நாளை முதல் நீங்கள் மேல்முறையீடு செய்ய முடியும். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி உள்ளது. வெள்ளிக்கிழமையில் இருந்து 1.06 கோடி பேருக்கு தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு 1.70 கோடி விண்ணப்பித்த நிலையில், சுமார் 70 லட்சம் […]

You May Like