சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கிற கனவோடு தன்னுடைய 25 வயதிலேயே சென்னைக்கு வந்து இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் அட்லீ. ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்த அட்லீ, அதன்பின்னர் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அவர் முதன்முதலில் இயக்கிய படம் ராஜா ராணி.
திருமணத்திற்கு பின் உள்ள காதல் வாழ்க்கையை மிக அழகாக காட்சிப்படுத்தி இருந்தார். ராஜா ராணி படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை அடுத்து விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். இந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூலை வாரிக்குவித்தது. தெறி படத்தின் ரிசல்டால் அட்லீ மீது இம்பிரஸ் ஆன விஜய், அவருக்கு தன்னுடைய மெர்சல் படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தார். அப்படமும் விஜய்யின் கெரியரில் பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டு செய்தது.
பின்னர் இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக இணைந்த படம் தான் பிகில், அப்படத்தையும் வெற்றியடையச் செய்து ஹாட்ரிக் ஹிட் காம்போவாக உருவெடுத்தது. பிகில் படம் நடிகர் விஜய்யின் கெரியரில் முதல் 300 கோடி வசூல் ஈட்டிய படமாக இருந்தது.
இப்படி தமிழ் சினிமாவில் நான்கு ஹிட் படங்களை கொடுத்த அட்லீக்கு, பாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்தது. அதுவும் ஷாருக்கான் படத்தை இயக்க சான்ஸ் கிடைத்தது. அதை கெட்டியாக பிடித்துக் கொண்ட அட்லீ, ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற தரமான ஹிட் படத்தை கொடுத்து பாலிவுட்டையே வாயடைக்க செய்தார். இன்று பாலிவுட்டில் செம டிமாண்ட் உள்ள இயக்குனராகவும் அட்லீ இருக்கிறார். பாலிவுட்டில் அவர் இயக்கிய முதல் படமே ரூ.1000 கோடி வசூலித்ததால், தன் சம்பளத்தையும் மளமளவென உயர்த்திய அட்லீ, தற்போது ஒரு படத்துக்கு ரூ.60 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார்.
Read more ; ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிட வேண்டும்..? முட்டை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன?