fbpx

திடீரென ஏற்பட்ட மாற்றம்..!! தமிழ்நாட்டில் மீண்டும் மழை..? வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வடமேற்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில், பின்னர் மழை பெய்யவில்லை என்பதும் வறண்ட வானிலை நிலவி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் பனிமூட்டம் மட்டுமே இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது திடீரென ஏற்பட்ட கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும், நீலகிரியில் ஓரிரு இடங்களில் இரவு/அதிகாலை வேளையில் உறைபனிக்கு வாய்ப்புள்ளதாகவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

விவசாயிகளே..!! 16-வது தவணைத் தொகைக்கு வெயிட்டிங்கா..? ரூ.2,000 பெற இன்றே கடைசி..!!

Wed Jan 31 , 2024
பிஎம் கிசான் திட்டமானது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள விவசாயிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு பண உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, ஒரு தவணைக்கு ரூ.2,000 வீதம், ஒரு ஆண்டுக்கு மொத்தம் ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்நிலையில், நீண்ட […]

You May Like