நடிகர் விஜய் தற்போது இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கி உள்ளார்..
வாரிசு படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார்.. லியோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஊட்டியை தொடர்ந்து சமீபத்தில் காஷ்மீரில் தொடங்கியது.. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளார்.. பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இதில் வில்லனாக நடிக்க உள்ளார்..

இது தான் சஞ்சய் தத் தமிழில் அறிமுகமாகும் முதல் படமாகும்.. இவர்கள் தவிர, அர்ஜுன், விக்ரம், மிஷ்கின், கௌதம் மேனன், நிவின் பாலி, மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது… அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது..
இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கி உள்ளார்.. மேலும் கணக்கை தொடங்கிய உடனே தனது புகைப்படத்தை புரொஃபைல் பிக்சாராக மாற்றி, ஹாய் நண்பா, நண்பிஸ் என்று பதிவிட்டுள்ளார்.. இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நடிகர் விஜய்யை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர ஆரம்பித்துள்ளனர்..