fbpx

அந்த ஆள பார்த்தாலே கோவம் வருது.. பெண்கள் இருக்கும் இடத்தில் இப்படியா டிரெஸ் போடுறது? – பிக்பாஸ் பிரபலத்தை வச்சு செய்த வனிதா

பிக்பாஸ் சீசன் 8-ஐ நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் போட்டியில், முதல் நாள் அன்று 18 போட்டியாளர்களை அறிமுகம் செய்து விஜய் சேதுபது வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். முந்தைய சீசன்களில் கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த சீசனில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது மக்களிடையே எதிர்பார்ப்பை தூண்டியது. முதல் நாளே போட்டியாளர்களை அவர் கையாண்ட விதம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவருடைய எதார்த்தமான பேச்சால் அனைவரையும் கவர்ந்தார். எந்தவொரு பதற்றமும் இல்லாமல் தடுமாற்றமும் இல்லாமல் நிகழ்ச்சியை உற்சாகப்படுத்தினார் விஜய்சேதுபதி.

இந்நிலையில் எப்போதும் பிக்பாஸ் பற்றி விமர்சன வீடியோ போடும் வனிதா இப்போதும் ஒரு வீடியோவை போட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர், “பிக்பாஸ் சீசன் எட்டில் சத்யா அணியக்கூடிய உடைகளில் எனக்கு விருப்பமில்லை. பெண்கள் குட்டையான உடை அணிந்தால் உடனே தவறான எண்ணம் தோன்றுகிறது என்று கூறுகிறார்கள். அதேபோல் ஆண்களும் கவர்ச்சியான உடையை அணிந்தால் பெண்களுக்கும் அது தோன்றும்தானே. பெண்கள் மோசமான உடை அணியக்கூடாது என்று எப்படி சொல்கிறார்களோ அதேபோல் ஆண்களும் கவர்ச்சியான உடைகள் அணியக்கூடாது என்று சொல்ல வேண்டும்.

சத்யா அணியக்கூடிய உடைகளை பார்க்கும்போது எனக்கு ஒரு மாதிரி அருவருப்பாக இருக்கிறது. பார்ப்பதற்கே ரொம்ப மோசமாக இருக்கிறது. தான் ஒரு ஆணழகன் என்பதை காட்டுவதற்காக வேண்டுமென்றே இப்படியான உடைகளை அணிந்துகொண்டு இளம்பெண்கள் இருக்கும் இடத்தில் அவர் சுற்றிக்கொண்டிருப்பதெல்லாம் பார்ப்பதற்கு சுத்தமாக சரியில்லை” என்றார்.

பிரபல சினிமா பாடகியான ரம்யாவின் கணவர்தான் சத்யா. இவர் எப்போதுமே உடற்பயிற்சி செய்து கொண்டும் தன் உடம்பை கட்டுமஸ்தாக வைத்துக் கொண்டும்தான் இருப்பார். ஆணழகன் போட்டியில் பங்குபெற்று பரிசுகளையெல்லாம் வாங்கியிருக்கிறார். இவர் அணியும் டிரெஸ் பற்றித்தான் வனிதா விமர்சித்துள்ளார். அதாவது பெண்கள் அணியும் டிரெஸ் ஆண்களுக்கு ஒருவித தூண்டுதலை ஏற்படுத்துகிறது என்றால் ஆண்கள் போடும் டிரெஸ்ஸில் ஆபாசம் இல்லையா? பெட் ரூமில் போடும் டிரெஸ்லாமாவா இங்கே போடுவீங்க என சத்யா அணியும் டிரெஸ் பற்றி வனிதா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Read more ; 2026-ல் அதிமுக ஆட்சி… உட்பகை கொண்டவர்கள் இனி தேவையில்லை… தியாகம் செய்ய நான் இருக்கிறேன் -எடப்பாடி பழனிசாமி…

English Summary

Actress Vanitha has criticized the outfit of a male contestant in the Bigg Boss house.

Next Post

”ஆத்தி பார்க்கவே ரண கொடூரமா இருக்கே”..!! தெரிஞ்சு கூட இந்த மீனை தொட்றாதீங்க..!! உயிருக்கே ஆபத்து..!!

Tue Oct 15 , 2024
The fish is said to release its venom in just 0.5 seconds.

You May Like