fbpx

ரெக்கார்டை முடியடித்தார் அஜித் குமார்.. கார் ரேஸில் 1.47 நிமிடத்தில் புதிய சாதனை..!!

தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டு மிகவும் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். 90 களில் தொடங்கி தற்போது வரை இவருக்கான ரசிகர் பட்டாளம் கூடிக்கொண்டேதான் இருக்கிறார்களே தவிர குறையவில்லை. தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை தன்வசம் வைத்திருக்கிறார் அஜித். நடிகர் அஜித் கார், பைக்குகளை அதிகம் விரும்பும் நபர் என்று நமக்கு தெரியும். இவர் பல்வேறு கார்பந்தயப் போட்டிகளில் கூட பங்கேற்றுள்ளார். 

உலகம் முழுவதும் பைக்கில் வலம் வர வேண்டும் என்கிற, தன்னுடைய கனவை நிஜமாக்கி கொள்ள தொடர்ந்து போராடிவரும் அஜித், ஏற்கனவே கார் ரேஸில் கலந்து கொண்ட நிலையில், தற்போது பல வருடங்களுக்கு பின்னர் இந்த ஆண்டு மூன்று கார் ரேஸில் கலந்து கொள்ள பயிற்சி எடுத்து வருகிறார். இந்த நிலையில் துபாயில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது அடுத்த பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளது அஜித்குமார் ரேசிங் க்ளப் அணி.

ஸ்பெயின் நாட்டின் பேலன்சிய மாகாணத்தில் நடைபெற்ற கார் ரேசில் நடிகர் அஜித்குமாரின் அணி கலந்து கொண்டது. இந்த போட்டியின் தகுதி சுற்றில் அஜித்குமார் கலந்து கொண்டார். கிளப் டிவிஷன் முதல் ரேஸில் 14வது இடத்தை அவர் பிடித்து அசத்தியிருக்கிறார். இந்த நிலையில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பிப்ரவரி 28 முதல் மார்ச் ஒன்றாம் தேதி வரைக்கும் ஸ்பெயினில் உள்ள பார்ஸிலோனியாவில் நடைபெற்ற கார் பந்தையத்தில் அஜித் குமார் அவருடைய ரெக்கார்டை அவரே முறியடித்துள்ளார். 1.47 நிமிடத்தில் பந்தைய தொலைவை கடந்தார். இதற்கு முன் அவர் ஓட்டும் பொழுது 1.51 நிமிடத் தொலைவில் காரை ஓட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது

Read more:நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய மு.க.அழகிரி.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

English Summary

Ajith Kumar broke the record.. a new record in car race in 1.47 minutes..!!

Next Post

கோவை ஐடி நிறுவனத்தில் வேலை.. அனுபவம் வேண்டாம்.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

Tue Mar 4 , 2025
Clonifypro IT company operating in Coimbatore has released an employment notification.

You May Like