fbpx

அட்டகாசம்…! முதலமைச்சரின் “ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம்”.‌‌..! தமிழக அரசு அரசாணை வெளியீடு…!

முதலமைச்சரின் “ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம்” தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியதாவது; தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறமைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்த இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதலமைச்சருடன் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டத்தின் போது, மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்தவும், புதியக் கண்டுபிடிப்புகளைத் தமிழ்நாட்டில் ஊக்கப்படுத்தவும் முதலமைச்சரின் “ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் திட்டம்” தொடங்கப்பட்டது.

இதற்காக மாநில அளவில் தகுதித்திட்ட தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்கள் தேர்வுச் செய்யப்படுவார்கள் என அறிவித்திருந்தார். இந்த திட்டத்திற்கு தமிழகத்தை பூர்விகமாக கொண்ட மாணவர்கள், முதுகலை பட்டபடிப்பில் அங்கீகாரம் பெற்ற மாணவர்கள் கல்வி நிறுவனத்தில் எந்த பிரிவில் படித்தாலும் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் முன்னுரிமை அளித்து உதவித்தொகை வழங்கப்படும் என குறிப்பிடப் பட்டிருந்தது. மேலும் இந்த தேர்விற்கான முறையையும், தேர்வு செய்வதற்கான குழுவும் அமைத்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

தமிழில் பெயர் பலகை இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்!... உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

Fri Mar 3 , 2023
தொழில் நிறுவனங்கள், கடைகளில் தமிழ்நாடு அரசின் அரசாணை படி தமிழில் பெயர் பலகை வைக்காதவர்கள் மீது அதிக அபராதம் விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த, வழக்கறிஞர் திருமுருகன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கில், “தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து விதமான அலுவலகங்கள், கடைகளில் தமிழ்நாடு அரசின் அரசாணை […]

You May Like