fbpx

திருச்செந்தூர் கோயிலுக்கு போறீங்களா? இனி இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளின் இரண்டாம்படை வீடு திருச்செந்தூரில் அமைந்துள்ளது. கடலோரத்தில் வீற்றிருக்கும் செந்தில்நாதனை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோயிலின் புனித தன்மையை காக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் இனி பக்தர்கள் செல்போன் கொண்டு செல்வதற்கு அனுமதி கிடையாது. வழக்கு ஒன்றை விசாரித்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், கோயில் என்பது சுற்றுலாத்தலம் அல்ல என்று கூறியுள்ள நீதிமன்றம் கோயிலுக்கு வருபவர்கள் உடைகளில் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. 

திருச்செந்தூர் கோயிலுக்கு அர்ச்சகர்கள் உள்பட பக்தர்கள் யாரும் போன் பேசக்கூடாது என்றும், உள்ளே செல்போன் கொண்டுவரக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை செல்போன் பயன்படுத்தி அதை கண்டுபிடிக்கப்பட்டால் பறிமுதல் செய்து அதை திரும்ப பக்தர்களுக்கு கொடுக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கோயில்கள் என்ன சத்திரமா? என்று நீதி கேள்வி எழுப்பியுள்ளனர். பக்தர்கள் ஜீன்ஸ், லெகின்ஸ், டிஷர்ட் அணிந்து கொண்டு கோயிலுக்குள் வருவது பற்றி நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், கோயிலுக்குள் செல்ஃபி, புகைப்படம் எடுப்பதை தடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Post

காதலனை கொலை செய்ய 10 முறை படையெடுப்பு!! பரபரப்பு வாக்குமூலம்!!

Wed Nov 9 , 2022
ஜுஸில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொலை செய்வதற்கு முன்பே கிட்டத்தட்ட பத்துமுறை அவரை கொல்ல படையெடுத்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்த ஷாரோன் ராஜ் என்பவரும் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் வசிக்கும் கிரீஷ்மா என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கிரீஷ்மா குடும்பத்தினர் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் தங்களின் காதல் வெளியில் தெரிந்துவிட்டாலோ, ஷரோன் தனது திருமணத்தில் பிரச்சனை செய்துவிடுவாரோ […]

You May Like