fbpx

பாயசத்தால் கலவர வீடான கல்யாண வீடு….. !சீர்காழி அருகே பரபரப்பு….!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு ரத வீதியில் இருக்கின்ற திருமண மண்டபம் ஒன்றில் திருமண நிச்சயதார்த்த விழா நடந்தது இதில் மண்டபத்தின் வாசலில் மணமகன் வீட்டார், மணமகன் வீட்டார் உள்ளிட்ட இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சீர்காழி நகர காவல் துறையினர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று இருதரப்பையும் சமாதானம் செய்து விசாரணை நடத்தியதில் நிச்சயதார்த்த விழாவிற்கு வந்தார்கள் உணவு உட்கொண்ட போது பாயாசம் பரிமாறி இருக்கிறார்கள். அப்போது பாயாசம் சரியில்லாததால் அதனை பெண் வீட்டார் கேட்டு தகாத வார்த்தையால் திட்டியதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக, மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் ஆத்திரம் கொண்டு சாம்பாரை பெண் வீட்டார் மீது ஊற்றியதாக சொல்லப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு அதிகரித்து மோதல் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே திருமண நிச்சயதார்த்தத்திற்கு வந்தவர்கள் சாப்பாடு சாப்பிடும் போது டேபிள் சேர்களை தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

மண்டப வாசலில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக சீர்காழி நகர காவல் துறையினர் சம பீடத்திற்கு சென்று விசாரணை நடத்தி இருதரப்பினருக்கும் இடையே சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

Next Post

தமிழக மக்களே எல்லோரும் உஷாராக இருங்கள்…..! எதிர்வரும் ஒரு வாரத்திற்கு வெளியானது புதிய அலார்ட்….!

Mon Jun 5 , 2023
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். மே மாதம் தொடக்கத்தில் கத்தரி வெயில் என்று சொல்லக்கூடிய அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தற்சமயம் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்துவிட்ட நிலையிலும், வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. இத்தகைய நிலையில், கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஆரம்பிப்பது தாமதமாவதால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் […]

You May Like