fbpx

இன்று கைதாகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்..? உறுதி செய்த ஆம் ஆத்மி அமைச்சர்கள்..!! அரசியலில் பரபரப்பு..!!

டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய பிறகு, இன்று (ஜனவரி 4) காலை அவர் கைது செய்யப்படுவார் என்று தகவல் கிடைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. டெல்லி மதுக் கொள்கை ஊழல் வழக்கில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அனுப்பிய 3-வது சம்மனை கெஜ்ரிவால் தவிர்த்துவிட்டதை அடுத்து, அவர் இன்று கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக அக்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி சட்டத்துறை அமைச்சர் அதிஷி நேற்றிரவு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருந்தார். அவரின் பதிவில் “நாளை காலை @அரவிந்த் கேஜ்ரிவாலின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப் போகிறது என்று செய்திகள் வருகின்றன. கைது செய்ய வாய்ப்புள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ட்வீட்டை தொடர்ந்து டெல்லி சுகாதார அமைச்சர் சௌரப் பரத்வாஜும் எக்ஸ் வலைதளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது பற்றிய ஊகங்கள் இருப்பதாகக் தெரிவித்தார். அவரின் பதிவில் “அமலாக்கத்துறை நாளை காலை முதல்வர் கெஜ்ரிவாலின் வீட்டிற்குச் சென்று அவரைக் கைது செய்யப் போகிறது என்று நாங்கள் கேள்விப்பட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Chella

Next Post

சுப்ரீம் கோர்ட்டில் குரலை உயர்த்தி பேசிய வழக்கறிஞர்..!! செம டோஸ் விட்ட தலைமை நீதிபதி..!! எங்க சத்தத்தையே காணோம்..!!

Thu Jan 4 , 2024
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று வழக்குகளை விசாரித்து கொண்டிருந்தார். அப்போது மனுக்களை பட்டியலிடுவது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் சத்தமாக தனது கருத்தை தெரிவித்துக் கொண்டிருந்தார். இதனை கவனித்த தலைமை நீதிபதி சந்திரசூட் அதிர்ச்சி அடைந்து அந்த வழக்கறிஞரை கண்டித்தார். வழக்கறிஞர் குரலை உயர்த்தி பேசிக் கொண்டிருந்த போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ”ஒரு நிமிடம்.. உங்கள் குரலை சற்று குறைத்துப் பேசுங்கள். இந்த நீதிமன்றத்தில் மரியாதையுடன் பேசுங்கள்” என்றார். […]

You May Like