fbpx

பெண் நீதிபதி படுகொலை!… கணவரின் கொடூர செயல்!… மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி!

மத்தியபிரதேசத்தில் பெண் நீதிபதியை கணவர் கழுத்தை நெரித்து கொலை செய்த பயங்கர சம்பவம் நடந்தது.

மத்திய பிரதேச மாநிலம் போபால் அடுத்த ஷாபுரா நீதிமன்றத்தின் துணை டிவிஷனல் மாஜிஸ்திரேட் நிஷா நபிட் (40) என்பவர் பணியாற்றி வந்தார். இவரது கணவர் மணீஷ் சர்மா. இவர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போதிருந்தே மணீஷ் சர்மாவுக்கு எவ்வித வேலையும் கிடைக்காமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் கணவர் – மனைவிக்குள் பிரச்னை இருந்து வந்துள்ளது.

மேலும் அடிக்கடி பணம் கேட்டு நிஷி நபிட்டிடம், மணீஷ் சர்மா தொந்தரவு செய்து வந்தார். இந்நிலையில் நிஷா நபிட்டின் அரசுப்பணி சேவை புத்தகம், காப்பீடு மற்றும் வங்கிக் கணக்கில், தன்னை நாமினியாக பரிந்துரைக்க வேண்டும் என்று மணீஷ் சர்மா வலியுறுத்தி வந்துள்ளார். இதனால் மேலும் மோதல் ஏற்பட்டது. ஆவேசமடைந்த மணீஷ் சர்மா, நீதிபதி நிஷா நபிட்டை தலையணையால் அழுத்தி கழுத்தை நெரித்தார். இதனால் மயக்கநிலை அடைந்த நிஷா நபிட்டை, அப்பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தார்.

ஆனால் அவரது மூக்கு மற்றும் வாயிலிருந்து ரத்தம் வெளியேறியதால் மயக்க நிலையில் நிஷா நபிட் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். மேலும் மாஜிஸ்திரேட்டின் மரணத்தில் சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நிஷா நபிட்டின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மனைவியை தலையணையால் அழுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்ததால் கணவர் மணீஷ் சர்மாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Kokila

Next Post

"முன்னாள் பிரதமருக்கு அடி மேல் அடி.." மோசடி வழக்கில் இம்ரான் கான், மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை.!

Wed Jan 31 , 2024
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு கடுமையான சோதனை காலம் நிலை வருகிறது. அரசு ரகசியங்களை கசிய விட்ட வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் மற்றொரு வழக்கில் இம்ரான் கானுக்கும் அவரது மூன்றாவது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு 14 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி இன்று தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. பாகிஸ்தானின் தேசிய பொறுப்புடைமை பணியகம் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் […]

You May Like