fbpx

மக்களே கவனம்..!! இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!! உயிருக்கே ஆபத்து..!! மின்சார வாரியம் எச்சரிக்கை..!!

தரமான ஐ.எஸ்.ஐ. முத்திரையிட்ட மின் சாதனப் பொருட்களை மட்டுமே வீ்டுகளில் பயன்படுத்த வேண்டும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மழை, மின்னல், காற்று காலங்களில் பொதுமக்கள் மின்சார கம்பங்களுக்கு செல்லும் மின்சார பாதை மற்றும் மின்மாற்றிக்கு அருகில் நிற்கவோ, செல்லவோ கூடாது. மேலும், மின்மாற்றிகளிலோ அல்லது மின்கம்பத்திலோ பழுது ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கு தெரியப்படுத்தி அதனை சரி செய்துக்கொள்ள வேண்டும்.

அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடக்கூடாது. அருகில் செல்லக் கூடாது. மற்றவர்களையும் செல்லவிடாமல் பார்த்துக் கொண்டு உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தரமான ஐ.எஸ்.ஐ. முத்திரையிட்ட மின் சாதனப் பொருட்களை மட்டுமே வீ்டுகளில் பயன்படுத்த வேண்டும். பழுது ஏற்பட்டால் உடனடியாக மின் துண்டிப்பு ஏற்படும் வகையில் வீடு கட்டுமானங்களில் (இ.எல்.சி.பி.) நிலகசிவு மின்திறப்பான் கருவிகளை பொருத்த வேண்டும்.

மின் கம்பம் மற்றும் ஸ்டே (இழுவை) கம்பிகளில் ஆடு, மாடுகளை கட்டக் கூடாது. வீட்டில் துணி காயப்போடுவதற்காக கட்டும் கயிற்றின் மீது எந்தவொரு மின் ஒயரையும் சுற்றி எடுத்துச் செல்லக் கூடாது. பஸ், லாரி போன்ற வாகனங்களை மின்மாற்றிக்கு அருகிலோ, மின்பாதைக்கு அருகிலோ, கீழ் பகுதியிலோ நிறுத்தக் கூடாது. மின் பழுது, மின் குறைபாடுகள் மற்றும் விபத்து குறித்து உடனடியாக அருகில் உள்ள மின் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

தொடங்கியது வாக்குப்பதிவு….! நக்சலைட்டுகள் அச்சுறுத்தல்., பலத்த பாதுகாப்பு! 3 மணிக்கே வாக்குபதிவு நிறைவு..!

Tue Nov 7 , 2023
மிசோரம் மற்றும் சத்தீஸ்கரில் இன்று சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்திய பாராளுமன்றத்தின் 543 இடங்களுக்கு அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் இம்மாதம் பல்வேறு தேதிகளில் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இந்த 5 மாநில தேர்தல்களுக்கும் டிசம்பர் 3 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும். சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல்கள் நடத்தப்பட உள்ளது. […]

You May Like