fbpx

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு..!! ஹால்டிக்கெட் வெளியீடு..!! பதிவிறக்கம் செய்வது எப்படி..?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தமிழ்நாடு கருவூலங்கள் மற்றும் கணக்கு பணிகள் மற்றும் வாரியங்கள், நிறுவனங்களில் அடங்கிய பதவியில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழி தேர்வு வரும் 5ஆம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல், 6ஆம் தேதி முற்பகலில் நடைபெறவுள்ளது.

தேர்வெழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால்டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

அதிர்ச்சி | மீண்டும் ஒரு 'NEET' மரணம்..! விடுதியில் தற்கொலை செய்து கொண்ட 19 வயது மாணவன்.!

Thu Jan 25 , 2024
உத்திரபிரதேச மாநிலத்தைச் சார்ந்த 19 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். உத்திரபிரதேசம் மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவன் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளான். விடுதியில் தங்கி படித்து வந்த மாணவனின் அறை திறக்கப்படாமல் மூடியே இருந்திருக்கிறது இதனால் சந்தேகம் அடைந்த […]

You May Like