fbpx

ஆட்டோ 40, பைக் 50, கார் 60..! போக்குவரத்து காவல் துறை புதிய அறிவிப்பு..! நவம்பர் 4 முதல்…

விபத்துகளை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் அதை சீர் செய்யக்கூடிய வகையில் போக்குவரத்து காவல்துறை புதிய மாற்றங்களை கொண்டு வருகிறது. சென்னையில் வாகனங்களின் வேக கட்டுப்பாடு நவ.4ஆம் தேதி முதல் அமலுக்குவருகிறது. இந்நிலையில் எந்தெந்த வாகனங்கள் என்ன வேகத்தில் செல்லலாம் என்பது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் ஆட்டோக்கள் 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. அதுபோல இருச்சக்கர வாகனங்கள் 50 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லலாம் என தெரிவித்துள்ளது. மேலும் இலகுரக வாகனங்கள் 60 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் எனவும், கனரக வாகனங்கள் 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல அனுமதிக்கப்படும் எனவும், குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் 30 கி.மீ வேகம் வரை மட்டுமே செல்ல வேண்டும் எனவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விதிகள் நவ.4ஆம் தேதி முதல் சென்னையில் அமலுக்கு வரும் பட்சத்தில், விதிகளை மீறும் வாகனங்களுக்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் மற்றும் அபிராத்தனைகள் விதிக்கப்படும் என்பன போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

Kathir

Next Post

தீபாவளி குட் நியூஸ்...! நவம்பர் 5-ம் தேதிக்குள் 35,941 ரேஷன் கடைகளிலும்...! தமிழக அரசு அதிரடி உத்தரவு...!

Thu Nov 2 , 2023
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5ம் தேதிக்குள் 35,941 நியாய விலைக் கடைகளிலும் அரிசி உட்பட இதர பொது விநியோகத்திட்ட பொருட்கள் இருப்பு வைத்திட துறை அலுவலர்களுக்கு ஆய்வு கூட்டத்தில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க 31.10.2023 அன்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி […]

You May Like