fbpx

புற்றுநோய் செல்களை அழிக்கும் அற்புத பழம்.. வேறு என்னென்ன நன்மைகள் தரும் தெரியுமா.!?

பொதுவாக நம் சிறுவயதில் அனைவரும் சாலையோரத்தில் இந்த செடியில் உள்ள பழங்களை எடுத்து சாப்பிட்டு இருப்போம். இந்த செடியில் உள்ள மருத்துவ குணநலன்கள் என்ன என்பதை குறித்து தெரியாமலே சாப்பிட்டு வந்திருக்கிறோம். உடலுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் முடக்கத்தான் கீரை செடியில் உள்ள பழத்தின் நன்மைகளை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

இந்த பழத்தை முடக்கத்தான் பழம் என்றும், தக்காளியை போலவே இருப்பதால் சொடக்கு தக்காளி என்றும் அழைக்கபடுகிறது. சொடக்கு தக்காளியை சாப்பிட்டு வந்தால் எலும்புகளில் கால்சியம் அதிகரித்து உடல் வலி, மூட்டு வலி, முதுகு வலி போன்ற வலிகளை நீக்கி சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது.

மேலும் உடலில் புற்று நோய் ஏற்படுத்தும் அறிகுறி அல்லது ஏற்கனவே புற்று நோய் இருப்பவர்கள் சொடக்கு தக்காளி அடிக்கடி  சாப்பிட்டு வருவதன் மூலம் புற்று நோய் செல்களை அடியோடு அழித்து புற்று நோயை வளர விடாமல் செய்கிறது. உடலுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சத்து இதில் அதிகம் நிறைந்துள்ளது.

இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு, டி என் ஏ சம்மந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்தும் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், சொடக்கு தக்காளியை சாப்பிடுவதால் பசியை கட்டுப்படுத்தி அதிகமாக பசி ஏற்படுவதை குறைக்கிறது. சிறுநீரக கல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்ற சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இதை எடுத்துக் கொண்டு வந்தால் நோய் பாதிப்பு விரைவில் குறையும்.

Rupa

Next Post

நேற்று இரட்டை குண்டுவெடிப்பு..!! இன்று நாடாளுமன்ற தேர்தல்..!! பீதியில் வாக்களிக்கும் மக்கள்..?

Thu Feb 8 , 2024
பாகிஸ்தான் நாடாளுமன்றமான தேசிய சபைக்கு இன்று தேர்தல் நடைபெறவுள்ளது. வன்முறை, அரசியல் நிச்சயமற்ற தன்மை, பொருளாதார நெருக்கடி போன்ற சவால்களுக்கு மத்தியில் பாகிஸ்தானில் இன்று தேர்தல் நடக்க உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, மொத்தம் 12 கோடியே 85 லட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க தகுதியுடைவர்கள் என தெரிகிறது. இவர்கள் […]

You May Like