fbpx

பெங்களூரு மெட்ரோ : வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தி இனி மெட்ரோ டிக்கெட் பெறலாம்…

நம்ம மெட்ரோ எனப்படும் பெங்களூரு மெட்ரோ ரயில்களில் பயணிக்க வாட்ஸ் ஆப் பயன்படுத்தி டிக்கெட் பெறும் புதிய முறையை நம்ம மெட்ரோ அறிமுகப்படுத்தியுள்ளது.

பெங்களூரு மெட்ரோ ரயில் கார்பரேஷன் வெளியிட்டுள்ள தகவலில் ’’வாட்ஸ் ஆப்பில் டிக்கெட் பெறும்  வகையிலும் சேட் பாக்ஸ்-ல் இந்த வசதியை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்மெட்ரோ பயனர்கள் இனி டோக்கன்களையோ, அட்டைகளையோ கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருக்கது. இந்த சேட்பாட் மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு 5 சதவீதம் டிக்கெட் விலையில் சலுகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தி எவ்வாறு டிக்கெட் பெறுவது என்பதை பார்க்கலாம்.

கன்னடா மற்றும் ஆங்கில மொழியில் இந்த சாட்பாட் டிக்கெட் முறையை பயன்படுத்தலாம். இது மிகவும் எளிமையான முறையாகும். 810555667 என்ற எண்ணை உங்கள் மொபைலில் சேமிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து வாட்ஸாப்பில் நீங்கள் இந்த எண்ணிற்கு “Hi” என குறுந்தகவல் அனுப்ப வேண்டும். பின்னர் அதன் கீழ் 3 விருப்பங்கள் அளிக்கப்படும். க்யூ ஆர் டிக்கெட், அட்டை  மற்றும் ரீசார்ஜ், மோர் ஆப்ஷன் என வரும். அதில் முதல் ஆப்ஷனை க்ளிக் செய்து உள்ளே செல்லலாம். தொடர்ந்து பை டிக்கெட் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ததும். ஷேர் லொகேஷன் என கிடைக்கும். பின்னர் எந்த நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்பதை டைப் செய்ய வேண்டும். அல்லது அந்த பட்டியலில் இருந்து நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். லெகேஷன் ஷேர் செய்தவுடன் புக் செய்து கொள்ளலாம். பின்னர் சாட்பாட்டில் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்க வேண்டும்.

தொடர்ந்து பேமென்ட் ஆப்ஷன் கிடைக்கும். யுபிஐ வைத்தோ , வாட்சாப் பே வைத்தோ டிக்கெட் புக் செய்யலாம். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்த முடியும். ஒருவேளை தவறான நிலையத்திற்கு டிக்கெட்புக் செய்தால் அந்த டிக்கெட்டை கேன்சல் செய்து கொள்ளலாம் பின்னர் அந்த பணம் நம் அக்கவுண்டிற்கே வந்துவிடும்.

Next Post

போலீசில் சிக்காமல் கொலை செய்வது எப்படி..? கூகுளில் தேடிய காதலி..!! அடுத்த அதிர்ச்சி..!!

Tue Nov 1 , 2022
கேரளாவில் காதலன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அடுத்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை மூறியங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (23). இவர் குமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு ரேடியாலஜி படித்து வந்தார். கல்லூரிக்கு செல்லும் பேருந்தில் களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற கல்லூரி மாணவியுடன் […]
’நான் கொலை பண்ணல’..!! அந்தர்பல்டி அடித்த காதலி..!! ஆடிப்போன போலீஸ்..!! புயலை கிளப்பிய புதிய வாக்குமூலம்..!!

You May Like