பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் : பாரத் பெட்ரோலியம்
பணியின் பெயர் : Junior Executive (Quality Assurance)
கல்வித் தகுதி :
* வேதியியல் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
* அதேபோல், Secretary பணிக்கு ஏதாவதொரு பாடப்பிரிவில் 70% மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 29-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
கணினி வழி எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம் : ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : https://www.bharatpetroleum.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.2.2025