தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் செயலாளருமான டாக்டர் மஸ்தான் காலமானார்.
சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது வலிப்பு ஏற்பட்டு மஸ்தான் தஸ்தகீர் உயிரிழந்தார். மறைந்த முன்னாள் எம்.பி. மஸ்தான் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையர் துணைத் தலைவராக இருந்தவர். கருணாநிதி, முன்னாள் முதல்வர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாகவும், அன்பாகவும் இருந்தவர். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் முக.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்துவார் என கூறப்படுகிறது.