fbpx

மகிழ்ச்சி…! தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பிராட்பேண்ட் சேவை…! அரசு அதிரடி அறிவிப்பு…!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒருங்கிணைந்த பிராட்பேண்ட் சேவை அறிமுகம் செய்துள்ளது தமிழக அரசு.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயா் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வகங்களில் சராசரியாக பத்து முதல் இருபது கணினிகள், புரொஜக்டா்களும் நிறுவப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஒருங்கிணைந்த பிராட்பேண்ட் சேவை அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இணையத்தின் வேகம் மிகவும் குறைவாக இருந்ததால் பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களின் பயன்பாடும் குறைந்தது. எனவே, ஒவ்வொரு பள்ளிகளும் தங்களுக்கு தனித்தனியாக 100 ம்க்ஷல்ள் வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்பை அதிகபட்சம் ரூ.1,500 (ஜிஎஸ்டி உள்பட) கட்டணத்துக்குள் நிறுவிக் கொள்ளலாம். அதற்கான தொகை பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். பிராண்ட் பேண்ட் இணைப்புக்கான நிறுவுதல் கட்டணத்தை பள்ளிக்கு வழங்கப்படும் மானியத் தொகையிலிருந்து செலுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தொடர்ந்து காலை உணவை தவிர்க்கும் நபரா..? அப்போ உங்கள் மூளைக்கு நீங்க துரோகம் செய்றீங்க.!

Fri Nov 24 , 2023
உடலின் செயல்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தி இயக்கும் கட்டுப்பாட்டகமாக மனித மூளை செயல்பட்டு வருகிறது . மனித மூளை தான் உடலின் அனைத்து உறுப்புகளும் இயங்குவதற்கான சிக்னல்களை கொடுக்கிறது. இதன் அடிப்படையிலேயே அனைத்து உறுப்புகளும் இயங்குகின்றன. எனவே நமது மூலையில் ஏற்படும் ஒரு சிறிய பாதிப்பும் உடலின் இயக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். மனித மூளை சுறுசுறுப்பாக இயங்குவதற்கு ஆற்றல் தேவை. இந்த ஆற்றல் நம் உணவின் மூலமாகவே பெறப்படுகிறது. அதிலும் தூக்கத்திற்கு […]
Brain

You May Like