நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், அது 4-வது அலைக்கு வகுக்குமா என்ற கவலை ஏற்பட்டுள்ளது.. இதனிடையே நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வதை அரசாங்கம் ஊக்குவித்து வருவதால், கொரோனா தடுப்பூசி பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று பல வதந்திகள் உள்ளன. குறிப்பாக குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் அல்லது கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது..
கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதால், கருச்சிதைவுகள் ஏற்படும் அபாயம் அதிகம் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் சுகாதார நிபுணர்கள் இந்த கூற்றை மறுத்துள்ளனர்.. கோவிட்-19 தடுப்பூசிகள் பலமுறை பரிசோதிக்கப்பட்டதாகவும், கர்ப்பிணிப் பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பானவை என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

கோவிட் தொற்றுநோயைச் சுற்றியுள்ள தவறான தகவல்களைக் கையாள்வதில், கர்ப்பிணிப் பெண்களுக்கு கோவிட் தடுப்பூசியின் தாக்கத்தை கண்காணிக்க ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. கனடாவில் 85,000 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.. அதில் கொரோனா தடுப்பூசி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது கண்டறியப்பட்டது..
கருச்சிதைவு அல்லது குழந்தை இறந்து பிறப்பதற்கு அதிக ஆபத்து இல்லை என்றும் அந்த ஆய்வில் தெரியவந்தது.. கனடாவின் ஆய்வின்படி தாய் மற்றும் குழந்தை இருவரும் நல்ல ஆரோக்கியத்துடன் காணப்பட்டது. இது தவிர, இது தொடர்பாக பல விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்ட நிலையில், அந்த ஆய்வுகளிலும் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசியால் எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்தது..