கண் தொடர்பான பல்வேறு நோய்களை நாம் குணப்படுத்த முடியாமல், தவித்து வருவோம். ஆனால், அதற்கான ஒரு எளிமையான வழிமுறையை தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது பசும்பால் 100 மில்லி அளவு எடுத்துக் கொண்டு, அதே 100 மில்லி அளவு தண்ணீரில் பசும்பாலை விட்டு, இதில் வென்தாமரை மலர்களை போட்டு, நன்றாக காய்ச்சி, அதன் பிறகு, அதனை அடுப்பை விட்டு இறக்கி வைத்துவிட்டு, அதிலிருந்து வரும் ஆவியை, கண் வலி உள்ளிட்ட நோய்கள் வந்த கண்ணில் படுமாறு பிடித்துக் கொண்டால் கண் நோய்கள் நீங்கும்.
அதேபோல, நாள்தோறும் வெந்நீர் வைக்கும்போது, ஒரு கைப்பிடி சுக்கை தட்டி போட்டு, தேவைப்பட்டால், அந்த குடிநீரை வடிகட்டி கொள்ளலாம். பல்வேறு மருத்துவ குணங்களை வைத்திருக்கும் சுக்கு ஜீரணத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதை தவிர்த்து, இரவு உறங்க செல்லும்போது, இரண்டு வாழைப்பழத்தையும் சாப்பிடலாம். இதுவும் மலச்சிக்கலுக்கு தீர்வாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல தினந்தோறும் அதிகாலையில், லேசான வெந்நீரில் அரை டீஸ்பூன் கடுக்காய் பொடி போட்டு, குடித்து வந்தால், 15 நிமிடங்களில் உடல் சுத்தமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல தண்ணீரை அதிகமாக பறித்து வந்தால் இருக்காது என்று சொல்லப்படுகிறது. மேலும் வால்மிளகை தூள் ஆக்கி, ஒரு சிட்டிகை அளவு தேனில் குழப்பி தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வருவதால், கபம் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.