fbpx

போர்நிறுத்த ஒப்பந்தம்!. “மீண்டும் பிறந்ததுபோல் உணர்வு”!. திரும்பவும் காஸாவுக்கு படையெடுக்க தொடங்கிய மக்கள்!.

Gaza: 15 மாத காலப் போருக்குப் பிறகு ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவுக்குத் திரும்பி செல்கின்றனர்.

பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க ஹமாஸ் என்ற அமைப்பு செயல்படுகிறது. ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானில் இருந்து வருகிறது. இந்த இரு அமைப்புகளையும் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத பட்டியலில் இணைத்துள்ளனர்.ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதுமுதல், இஸ்ரேல் கொடூரமான பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்கா கூட போரை நிறுத்துமாறு கூறிவிட்டது. ஆனால், இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று சொல்லிவிட்டத்தால், தொடர்ந்து போர் நடைபெற்று வந்தது.

தொடர்ந்து 15 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த போரினால், பாலஸ்தீன மக்கள் பஞ்சம், பட்டினி மற்றும் போர் காரணமாக சித்ரவதைகளை அனுபவித்து வந்தனர். நோய் மறுபுறம் மக்களை காவு வாங்கியது. இவற்றிற்கு பயந்தும் குண்டுகளுக்கு பயந்தும் பாலஸ்தீன மக்கள் அங்கிருந்து வெளியேறி பக்கத்து நாடுகளுக்கு தப்பிச் சென்றனர். இந்த சமயத்தில்தான் சமீபத்தில் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. முதற்கட்டமாக 3 பெண் பணயக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது. இரண்டாவது கட்டமாக 4 இளம் இஸ்ரேல் பெண் பணயக் கைதிகளை ஹமாஸ் நேற்று முன்தினம் விடுவித்தது. அவர்களுக்கு ஈடாக 200 பாலஸ்தீனிய பணயக் கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது.

இந்தநிலையில், போர் நிறுத்தம் அமலில் உள்ளநிலையில், 15 மாதங்களுக்கு பிறகு 6.5 லட்சம் பாலஸ்தீன மக்கள் வடக்கு காசா பகுதிக்கு திரும்பியுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஸா பகுதியின் கடற்கரைப் பகுதியான நெட்சாரிம் வழித்தடம் மனிதாபிமான அடிப்படையில் திறக்கப்படுவதாக இஸ்ரேல் அறிவித்தது. அதன் வழியே இஸ்ரேலிய டாங்கிகளின் கண்காணிப்பில், அத்தியாவசியப் பொருள்களுடன் மக்கள் சாரைசாரையாக காஸாவுக்குள் நுழைந்துவருகின்றனர்.

Readmore: இந்த ஒரு பால் போதும், எந்த வைரஸ் பரவினாலும் உங்களுக்கு வராது!!!

English Summary

Ceasefire agreement!. “Feeling reborn”!. People who started to invade Gaza again!.

Kokila

Next Post

மவுனி அமாவாசையை முன்னிட்டு கும்பமேளாவிற்கு 190 சிறப்பு ரயில்கள்...!

Wed Jan 29 , 2025
190 special trains for Kumbh Mela on the occasion of Mauni Amavasya

You May Like