fbpx

பலத்த எதிர்பார்ப்பில் மத்திய பட்ஜெட்..!! வருமான வரி விலக்கு..!! நிச்சயம் இந்த அறிவிப்பு இருக்காம்..!!

மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதல் முறையாக உரையாற்றுகிறார். இந்த உரைக்குப் பிறகு, பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். 2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நாளை தாக்கல் செய்ய உள்ளார். அடுத்த ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இதுவாகும். பாஜக தலைமையிலான அரசின் கடைசி முழு நீள பட்ஜெட் என்பதால், நடுத்தரப் பிரிவு மக்களை கவர்வதற்கான திட்டங்கள் இதில் இடம்பெறும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அந்தவகையில், ரூ.2.5 லட்சம் வருமான வரி விலக்கு உச்சவரம்பு கடந்த 2014ஆம் ஆண்டு பட்ஜெட்டின்போது நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளாக அதில் மாற்றம் செய்யப்படாத நிலையில், உச்ச வரம்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாத சம்பளதாரர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

பிப்ரவரி மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா..?

Tue Jan 31 , 2023
நாளை முதல் பிப்ரவரி மாதம் தொடங்கும் நிலையில், வங்கிகளுக்கு எப்போது விடுமுறை என்று தெரிந்து கொண்டு கவனமாக இருப்பது நல்லது. ஏனென்றால் சிலர் வங்கி விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வதன் மூலம் முன் கூட்டியே உங்களது வங்கி சேவையினை திட்டமிட்டு செய்து கொள்ள முடியும். அதன்படி பிப்ரவரி மாதத்தில் வார இறுதி நாட்கள் உட்பட பண்டிகை காலங்களுடன் சேர்ந்து 9 […]

You May Like