fbpx

அடுத்த செக்…! மொத்தம் 6 யூடியூப் சேனல்களை முடக்கியது மத்திய அரசு…! என்ன காரணம் தெரியுமா…?

போலி செய்திகளை வெளியிட்டு வந்த 6 YouTube சேனல்களை மத்திய அரசு கண்டறிந்துள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மைத் தன்மையை கண்டறியும் பிரிவு, நடத்திய ஆய்வில் 6 யூ-ட்யூப் சேனல்கள் ஒருங்கிணைந்து தவறான தகவல்களை பரப்பியதை கண்டுபிடித்துள்ளது. இதற்கென 6 தனி ட்விட்டர் கணக்குகளை கையாண்டு சேனல்களில் தவறான தகவல் பரப்பலை இந்தப்பிரிவு முறியடித்துள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை சார்பில் இதுபோன்ற ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுவது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மைத்தன்மை கண்டறியும் பிரிவு நடத்திய ஆய்வில் 3 YouTube சேனல்கள் தவறான தகவல்களை பரப்பியது கண்டறியப்பட்டது.

அதன் படி, நேஷன் டிவி, சம்வாட் டிவி, சரோகர் பாரத், நேஷன் -24, ஸ்வர்னிம் பாரத், சம்வாட் சமாச்சார் ஆகிய இந்த 6 யூ-ட்யூப் சேனல்களும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி 20 லட்சம் சந்தாதாரர்களை கொண்டியிருப்பதும், அவர்கள் 51 கோடிக்கும் அதிகமான முறை இந்த தவறான தகவல்களைக் கொண்ட வீடியோக்களை பார்த்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சேனல்கள், தேர்தல், உச்சநீதிமன்ற விசாரணை, மத்திய அரசு ஆகியவை குறித்த உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்பியிருக்கின்றன. உதாரணமாக, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு தடை, குடியரசுத்தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பெயரிலான அறிக்கைகள் என்ற பெயரில் தவறான மற்றும் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பியிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Vignesh

Next Post

வைகையை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்‌...! உயர்நீதிமன்றம் உத்தரவு...!

Fri Jan 13 , 2023
வைகை நதியை பாதுகாக்க, கங்கையை தூய்மைப்படுத்தும் தேசிய திட்டத்திற்கு இணையான நிதி ஒதுக்கீடு செய்து, திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனு மீது, மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.புஷ்பவனம் தாக்கல் செய்த மனுவில் அனைத்து உரிமைகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் கொண்ட சட்டப்பூர்வ நபரின் அந்தஸ்து கொண்ட வாழும் நிறுவனங்களாக அறிவிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட […]
டெண்டர் முறைகேடு வழக்கு..! சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் அதிர்ந்துபோன எஸ்.பி.வேலுமணி..!

You May Like