fbpx

மக்களே எல்லாம் அலர்ட்‌…! அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்…! வானிலை மையம் எச்சரிக்கை….!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 16-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக் கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 நாட்களில் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

சென்னை விமான நிலையத்தில் மீண்டும் வந்தாச்சு..!! பயணிகள் வரவேற்பு..!!

Thu Apr 13 , 2023
1989ஆம் ஆண்டு முதல்வராக இருந்த மு.கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று அப்போதைய பிரதமர் வி.பி.சிங்க் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அண்ணா பன்னாட்டு நிலையம், காமராஜர் உள்நாட்டு முனையம் என்று பெயர் சூட்டினார். கடந்த 2017ஆம் ஆண்டு இந்த விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் அண்ணா, காமராஜர் பெயர் பலகைகள் அங்கிருந்து அகற்றப்பட்டன. இதையடுத்து, விமான நிலையத்தில் மீண்டும் தலைவர்கள் பெயர்களை வைக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் பலரும் […]

You May Like