fbpx

இந்த தேதியில் தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டத்தில் கனமழை…!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 16-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம்!... ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு போல் ஹமாஸ் நசுக்கப்படும்!

Fri Oct 13 , 2023
ஹமாஸ் ஐ.எஸ். ஐ.எஸ் போன்றது. ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் நசுக்கப்பட்டது போலவே ஹமாஸ் இயக்கமும் விரைவில் நசுக்கப்படும் என்று போரில் கொல்லப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை பகிர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த மோதல் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சனிக்கிழமை ஹாமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தொடுத்த திடீர் தாக்குதலே இதற்கு காரணம் ஆகும். […]

You May Like