fbpx

#Rain Alert: 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை…! மக்கள் எல்லோரும் கவனமாக இருங்க…!

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்குச்சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் , டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்..! எங்கெங்கு தெரியுமா?

வரும் 28-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 29-ம் தேதி அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், மதுரை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். வரும் 28ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

#சற்று முன்: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது...! அரசு வெளியிட்ட அறிவிப்பு...!

Fri Aug 26 , 2022
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மாமல்லபுரத்தில் கடந்த மாதம் இறுதியில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாள் நிகழ்வு நடைபெற்றது முன்னிட்டு அவ்விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட இருக்கும் என்பதால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மட்டும் பள்ளி, கல்லூரி,அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் […]
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை..! தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடல்..!

You May Like