fbpx

வரும் 18-ம் தேதி வரை இந்த பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை…! வானிலை மையம் தகவல்….!

16 முதல் 18-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று கடலோர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். 16 முதல் 18-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்க கூடும். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை. வழக்கம் போல கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம்.

Vignesh

Next Post

100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கீடு...!

Wed Mar 15 , 2023
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில்‌ உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும்‌, ஒரு நிதியாண்டில்‌ உத்தரவாதம்‌ அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பில்‌ அதிகபட்சம்‌ 100 நாட்கள்‌ உடலுழைப்பை வழங்கும்‌ மிகப்பெரிய சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்களில்‌ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை ஒன்றாகும்‌. இந்த திட்டத்திற்கு 2023-24ம் நிதியாண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு குறைவான நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. 2023-24ம் நிதியாண்டு […]

You May Like