fbpx

டெல்லி விரைகிறார் முதலமைச்சர் முக.ஸ்டாலின்..! பிரதமருடன் முக்கிய ஆலோசனை..?

குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று டெல்லி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். டெல்லி செல்லும் முதலமைச்சர் நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். அப்போது, நீட் விலக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வர் முக.ஸ்டாலின் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, தமிழகத்துக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள், ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிப்பது, மத்திய அரசின் மின்சார சட்டத்திருத்தம், நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் இருக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாகவும், தமிழகத்துக்கு தேவையான புதிய திட்டங்கள் குறித்தும் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் முக.ஸ்டாலின் வலியுறுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

டெல்லி விரைகிறார் முதலமைச்சர் முக.ஸ்டாலின்..! பிரதமருடன் முக்கிய ஆலோசனை..?

அதன் பின்னர் குடியரசுத் தலைரவராக பொறுப்பேற்றுள்ள திரௌபதி முர்மு மற்றும் துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜெகதீப் தன்கரை முதலமைச்சர் முக.ஸ்டாலின், சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Chella

Next Post

13 தங்க சுரங்கங்களை விற்பனை செய்ய மத்திய அரசு தீவிரம்..! என்ன காரணம்..?

Tue Aug 16 , 2022
ஆந்திரா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள மொத்தம் 13 தங்க சுரங்கங்களை, வரும் நாட்களில் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆந்திர பிரதேசத்தில் மொத்தம் பத்து சுரங்கங்கள் ஏலத்தில் விடப்பட உள்ளன. இவற்றில் ஐந்து சுரங்கங்கள், இம்மாதம் 26ஆம் தேதியன்று ஏலத்தில் விடப்பட உள்ளன. மீதி 5 சுரங்கங்கள், இம்மாதம் 29ஆம் தேதியன்று ஏலம் விட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பு, கடந்த மார்ச் […]
13 தங்க சுரங்கங்களை விற்பனை செய்ய மத்திய அரசு தீவிரம்..! என்ன காரணம்..?

You May Like